Friday, 31 May 2019

தன யோகத்தை அளிக்கும் வசுமதி யோகம்.!!

சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. 

சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது. வசுமதி என்றால் செல்வச்செழிப்பு என்பது பொருளாகும். ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசிக்கு, சுப கிரகங்களாக சொல்லப்படும் புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உபஜெயஸ்தானம் என்ற வீடுகளான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பது வசுமதி யோகம் ஆகும். 

இந்த யோகத்தை அடைந்தவர்கள் சுய முயற்சியின் மூலம் வீடு, நிலம், வாகனம் ஆகிய நலன்களுடன் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். மேற்குறிப்பிட்ட உபஜெய ஸ்தானங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் இருந்தால் நடுத்தரமான பொருளாதார நிலையையும், ஒரு சுபக்கிரகம் இருந்தால் சாதாரண பொருளாதார நிலையும் இருக்கும் என்பது ஜோதிட விதி. சுபக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் யோகம் வலிமையாக இருக்கும். 

ஆனால், அவை நீச்சம், பகை பெற்று இருந்தால் யோகம் பெரிய அளவில் இருப்பதில்லை. வசுமதி யோகம் அமைந்தவர் வாழ்க்கையில் தனம் சேர்வது உறுதி என்பது ஜோதிட வல்லுனர் வராகமிகிரர் கருத்தாகும். அதே சமயம், அந்த சுபக்கிரகங்கள் கண்டிப்பாக பாவ கிரகங்களின் தொடர்பு பெறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோகத்தின்படி ஒருவரது ஜென்ம லக்னம் அல்லது ராசிக்கு, குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்து, சுக்கிரன் அல்லது புதன் சேர்க்கை பெற்றிருப்பது விசேஷம் ஆகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment