காளிகா பரமேஸ்வரிக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கோவில் கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். இந்த அன்னையிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ள பெண்களிடம் உள்ளது.
இங்கு அன்னையின் சன்னிதியின் முன் மாத அமாவாசை தோறும் சூலினி பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் பில்லி, சூனியம் விலகும் என்பதும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.
இங்குள்ள அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது இந்த ஆலயம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, நகரப்பேருந்தில் மரக்கடை மற்றும் காந்தி மார்க்கெட் வரை பயணித்து, அதன்பிறகு நடந்தே சென்று விடலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment