சிவலிங்கத்தின் கண்களில் இரத்தம் வடிகிறது என்று தன்னுடைய கண்களைப்பிடுங்கி சிவனுக்கு வைத்தவர் கண்ணப்பரானதிண்ணனார். பொத்தப்பி என்னும் நாட்டில்உடுப்பூரில் வேடர்களுக்குத் தலைவனாகஇருந்தவர் நாகன். அவரது மனைவி தத்தை. இருவருக்கும் மணமாகியும் நீண்ட காலம்குழந்தைப்பேறில்லை. சுப்ரமணிசுவாமியைவழிபட்டு அவரது பேரன்பினால் கருத்தறித்ததத்தை தூக்க முடியாத அளவுக்கு திண்ணமானகுழந்தையைப் பெற்றெடுத்தாள். நாகன் தன்குழந்தைக்கு திண்ணன் என்று பெயர் சூட்டிமகிழ்ந்தார்.
வேடர் குலத்திற்கேற்ப வீரத்தோடு வளர்ந்தான்திண்ணன். வில் வித்தையைப் பயின்று சிறந்துவிளங்கினான். வேட்டையாடுவதற்கு உண்டானபலத்தையும் தகுதியையும் கொண்டு வாலிபபருவம் அடைந்தான். வயது காரணத்தால்வேட்டையாட செல்லமுடியாமல் நாகன்தன் மகனை வேடர்களின் தலைவனாகஅறிவித்தான். திண்ணனாரின் வலிமையைஉணர்ந்த மக்கள் மகிழ்ந்து வாழ்த்தினார்கள். பிறகு அவர்கள் வழக்கப்படி குலப்பூசை செய்துதிண்ணனாரை வாழ்த்தி வேட்டைக்குஅனுப்பினார்கள். நண்பர்களுடன் வேட்டாயாடவேங்கைப் புலி திண்ணனார் புறப்பட்டார்.
எதிர்பட்ட விலங்குகள் அனைத்தும் இவர்களதுவில்லுக்கு தப்பாமல் சாய்ந்து வீழ்ந்தது. பெரும்உறுமலோடும், கர்ஜனையோடும் வந்த புலி, சிங்கங்களாலும் கூட இவர்களிடமிருந்து தப்பமுடியவில்லை. இடையில் வந்த பன்றிக் கூட்டங்கள் மட்டும் வில்களில் படாமல் விலகிதப்பித்து ஓடியது. யாராலும் அவற்றைப் பிடிக்கமுடியவில்லை. திண்ணனாரின் நண்பர்களும்வேட்டைக்கு வந்தவர்களுமான நாணன், காடன்மட்டும் காட்டுப்பன்றியைத் துரத்தியபடிஓடினார்கள். அவர்களைத் தாண்டி பாய்ந்துவந்த திண்ணனார் காட்டில் கற்களைப்பொருட்படுத்தாமல் பாய்ந்து ஓடி பன்றிகளைவேட்டையாடி வெட்டி சாய்த்தார்.
பன்றியைத் துரத்தியதில் மூவரும்சோர்ந்துவிட்டார்கள். சரி இங்கேயே இந்தபன்றியை நெருப்பில் சுட்டு சாப்பிட்டுசெல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். தண்ணீர் என்று திண்ணனார் கேட்டபோதுகாட்டுக்கும் மலைக்கும் அப்பால் பொன்முகலிஆறு ஓடுவதாக நாணன் கூறினார். மகிழ்ந்ததிண்ணனார் அப்படி காட்டை கடந்துச்செல்லும்போது காளஹஸ்தி மலையைக்கண்டதும் உடல் சிலிர்க்க நின்றார். மலையுச்சியில் குடுமித்தேவர் இருக்கிறார்அவரை தரிசிக்கலமா என்று நாணன் கேட்ககுடுமித்தேவரை காண வேண்டும் என்னும்ஆர்வம் மேலிட வேகமாக விரைந்தார்திண்ணனார். காடனை சமைக்க சொல்லிநாணனை அழைத்தபடி சென்றார்.
ஏனோ குடுமி நாதரை பார்க்க போகிறோம்என்னும் எண்ணம் அவர் மனதில்அதிகப்படியான பற்றை உண்டாக்கியது. சுப்ரமணி நாதரை வணங்கும் குலத்தில் சிவன்பற்று கொண்டவராய் மாறி போனார். குடுமித்தேவரை நெருங்கும் உச்சியில்பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்ககேட்க செவியில் தேனாய் விழ உணர்ந்தார். குடுமித்தேவரைக் கண்டதும் கண்களின்அன்பின் பால் கண்ணீர் பெருகியது. குடுமித்தேவர் கழுத்தில் இருந்த மாலையும்பச்சிலையும் கண்டு ஆச்சர்யமடைந்தார். காட்டில் விலங்குகளோடு கவனிக்கயாருமில்லாமல் இருக்கும் குடுமித்தேவருக்குஇத்தகைய பணிவிடைகளை யார் செய்வதுஎன்று நாணணிடம் கேட்டார். அந்தணர் ஒருவர்வந்து செய்வதாக நாணன் கூறினார். ஆயினும்இதர நேரங்களில் ஐயன் தனியாக அல்லவாஇருப்பார்? எப்படி இவரைத் தரிசித்து நாம்திரும்புவது எனக்கு இவரோடு இருக்கவேண்டும் போல் அல்லவா இருக்கிறது. நான்என்ன செய்வேன் என்று கண்ணீர் சொரிந்தார்.
குடுமி நாதரின் அருகில் சென்றார். அப்போதுதான் ஞானம் வந்தது போன்றுஅவருடைய செய்கைகள் இருந்தன. அவரைஆரத்தழுவினார். காட்டில் தன்னந்தனியாகஎப்படி இருக்கிறீர்கள் என்று நாதரிடம் அழுதார். இறைவனிடத்தில் விடைபெறுவதும் மீண்டும்பிரிய முடியாமல் ஆரத்தழுவுவதுமாக இருந்ததிண்ணனாரைக் கண்டு நாதனுக்கு ஒன்றும்புரியவில்லை. தன்நிலை மறந்த திண்ணனார்இவருக்கு பசிக்குமே என்று செய்த காரியம்.
குடுமி நாதருக்குரிய வழிபாடுகளை செய்ய இயலாத அளவுக்கு காட்டில் தனித்து இருப்பதைக் கண்ட நாயனாருக்கு நெஞ்சு பொறுக்கவில்லை என்பதை பார்த்தோம். குடுமித்தேவரை சுற்றி சுற்றி வந்து வணங்கினார். காட்டில் இருக்கும் கொடிய மிருகங்கள் குடுமிநாதருக்கு துன்பத்தை இழைத்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சி விம்மி விம்மி அழுதார்.
உனக்குப் பூஜை அந்தணர் உனக்கு உணவும், தாகத்துக்கு நீரும் தருவதில்லையோ என்று அழுதார். இதோ நானே ஓடிச்சென்று தங்களுக்கு வேண்டிய பன்றி இறைச்சியும், குளிர்ந்த நீரும் கொண்டுவருகிறேன் என்று ஓடினார். இரண்டு எட்டு எடுத்து வைத்தவர் உம்மை விட்டு எப்படி நான் செல்வது என்று மீண்டும் வந்தும் குடுமித் தேவரை கட்டியணைத்துக்கொண்டார்.
திண்ணனார், குடுமித்தேவருக்கு இறைச்சி எடுத்துவரச் செல்வதும் மீண்டும் ஓடி வந்து குடுமித்தேவரை கட்டிப்பிடித்துக்கொள்வதுமாய் நேரம் கழிந்தது. இப்படியே தாயிடமிருந்து பிரியாத கன்றுக்குட்டி போல் குடுமித்தேவரை விட்டு பிரியாமல் ஓடுவதும் கட்டிப்பிடிப்பதுமாய் இருந்தவருக்கு குடுமித்தலைவருக்கு பசிக்குமே என்ற எண்ணம் மேலோங்கியது.
மனதை பிடிவாதமாக அடக்கி வில்லை ஏந்தியபடி பொன்முகலி ஆற்றுக்கு சென்றார். தலைவருக்கு ஏதோ ஆயிற்று போல என்று அதிர்ச்சியடைந்தபடி நாணன், திண்ணனாரைப் பின் தொடர்ந்தான். இறைச்சி சமைத்துக் கொண்டிருந்த காடனை ஒதுக்கிய படி இறைச்சியைப் பக்குவமாக சமைத்தார். இதற்கிடையில் காடனிடம், நாணன் தம் தலைவர் குடுமித்தேவரைக் கண்டதும் அன்பால் கட்டுண்டு விட்டார் என்றான். வாருங்கள் நமது நாட்டுக்குத் திரும்புவோம் என்று இருவரும் கூறியும் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தார் திண்ணனார்.
பிறகு பக்குவமாக ருசியாக இருந்த இறைச்சியைச் சாப்பிட்டு பார்த்து அவற்றையெல்லாம் கோர்த்து எடுத்து, வாய் முழுவதும் உமிழ்நீரை நிரப்பி, நறுமணமிக்க மலர்களை தலையில் சுமந்து நாணன், காடனை மறந்து குடுமித்தேவரிடம் சென்றார். செருப்பு அணிந்த கால்களால் குடுமித்தேவரை சுத்தம்செய்து வாயில் நிரப்பிய நீரை அவர் மேல் பொழிந்து தலையிலிருக்கும் பூவை அவர் மேல் விழச்செய்து “ஐயனே நானே பக்குவமாக சமைத்து ருசி பார்த்து கொண்டுவந்திருக்கிறேன். இதைச் சாப்பிடுங்கள்” என்று அன்பாக பரி மாறினார். பிறகு இரவு முழுவதும் காவல் இருந்தார்.
மறுநாள் ஐயனுக்கு பசிக்குமே நான் இன்று வேறு இறைச்சி எடுத்து வருகிறேன் என்று சென்றார். அப்போது குடுமித்தேவருக்கு பூஜை செய்ய அந்தணன் பதறிவிட்டார். ”ஐயனே என்ன இது கோலம்? யார் இந்த அபசாரங்களை செய்தது” என்று கதறியபடி குடுமித்தேவரை சுத்தம் செய்து பூஜை செய்துவிட்டு போனார்.
மறுபுறம் திண்ணனார் மானை வேட்டையாடி பக்குவமாக சமைத்து முன் தினம் போலவே வாயால் நீரை உமிழ்ந்து பூஜை செய்து இறைச்சி படைத்து இரவு முழுக்க குடுமித்தேவருடன் இருப்பார். மறுநாள் வரும் அந்தணன் வருந்துவார். இப்படியே மாறி மாறி 4 நாட்கள் தொடர்ந்த நிலையில் அன்று அந்தணன் கனவில் வந்த காளஹத்தி வேடர் குலத்தவன் என்னை அபசார மாக்கவில்லை. அவன் செருப்புக்கால்கள் எம்மீது பட்டாலும் குழந்தை வருடுவது போலவே உணர்கிறேன். வாயில் இருந்து உமிழும் நீரும் எனக்கு கங்கை புனித நீர் போன்றுதான். அன்பு மிகுதியால் அவன் எனக்கும் தரும் இறைச்சியும் அப்படியே என்று மறைந்தார்.
மறுநாள் குடுமித்தேவருக்கு பூஜை செய்த அந்தணன் மறைந்து நின்றான். திண்ணனார் வழக்கம் போல் இறைச்சியுடன் வந்து பூஜை செய்தார். அப்போது காளஹத்தியாரின் இடதுகண்ணிலிருந்து இரத்தம் கொட்டியது. செய்வதறியாது திகைத்த திண்ணனார் என்ன செய்தும் இரத்தம் வடிவது நிற்கவில்லை. தம்முடைய கூரியவில் அம்பால் தன் கண்களைக் குத்தி எடுத்து வலியை பொருட்படுத்தாமல் குடுமித்தேவருக்கு பொருத்திய பிறகு இரத்தம் நிற்கலாயிற்று.
மீண்டும் திருவிளையாடல் புரிய நினைத்த காளஹத்தியாரின் வலக்கண்ணிலிருந்து குருதி கொட்ட தொடங்கியது. திண்ணனார் வலக்கண்ணை பறிக்க வருந்தினார். ஒரு கண்ணைக் கொண்டு குடுமிநாதரை தரிசிக்கலாம் என்றால் அதுவும் முடியாது போல இருக்கிறதே ஆனாலும் குடுமித்தேவர் கஷ்டப்படக் கூடாதே என்று காலால் குடுமித்தேவரின் குருதி வரும் இடத்தைப் பற்றியபடி வலது கண்ணையும் அம்பால் குத்தி எடுக்க முயன்றார்.
இனியும் பொறுக்கக் கூடாது என்ற காளஹத்தியாரின் திருக்கரம் திண்ண னாரைக் கரத்தை தடுத்தது. நிற்க திண்ணப்பரே.. என்றார். தேவர்கள் பூமாரி பொழிய திண்ணனார் இறைவனது அன்பில் இருகண்களையும் பெற்று மெய் சிலிர்த்து நின்றிருந்தார். கண்ணைப் பெற்றதால் கண்ணப்பர் என்ற பெயரையும் பெற்றார்.
ஆயுள் முழுவதும் ஐயனை வழிபட்டும் பெற முடியாத பேறை ஆறுநாளில் அன்பு கொண்டு பெற்றுவிட்டாரே கண்ணப்பர் என்று போற்றினார் அந்தணர். காளஹத்தியார் திருவாய் மலர்ந்து ஒப்புயர்வற்ற கண்ணப்பரே நீர் எப்போதும் என் வலதுப்புறம் நிற்பாயாக என்று அருள் புரிந்தார். சிவாலயங்களில் தை மாதம் மிருக சீரிஷம் நட்சத்திரத்தன்று கண்ணப்ப நாயனாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment