Friday, 31 May 2019

பொருள் விரயங்கள் நீங்க வைஷ்ணவி தேவி காயத்ரி மந்திரம்.!!

அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே 
சக்ர ஹஸ்தாயை தீமஹி 
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

விஷ்ணுவின் பத்தினியான வைஷ்ணவி தேவிக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முதல் 108 எட்டு முறை வரை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை வடக்குத் திசையைப் பார்த்தவாறு துதித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி மகிழ்ச்சி, மன அமைதி உண்டாகும். வீட்டில் செல்வச் சேர்க்கை ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படுவது நீங்கும்.

ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது யோக நித்திரையில் இருந்தவாறு உலகத்தை இயக்குகிறார் நாராயணன் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி தான் வைஷ்ணவி என அழைக்கப்படுகிறார். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருச்செந்தூர் முருகன் கோயிலின் 24 தீர்த்தங்களின் மகிமை உங்களுக்கு தெரியுமா?

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் திருச்செந்தூர் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.


ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடுவதற்கும் ஒரு மகிமை இருக்கிறது.  இவற்றில்நாழிக்கிணறு (ஸ்கந்த புட்கரணி),வதனாரம்ப தீர்த்தம் இரண்டும்முக்கியமானவை.
நாழிக்கிணறு 24 அடி ஆழமுள்ள இடத்தில் ஒரு அடிஉ சதுரப்பரப்புள்ள தொட்டி போன்ற அமைப்பில் நீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இதில் எடுக்க எடுக்கக் குறையாது தண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது தனது படைவீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகப்பெருமான் தன் வேலை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று ஊறப்படுகிறது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராடவேண்டும் என்பது ஐதீகம்
வதனாரம்ப தீர்த்தம் கடலில் பாறைகள்நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்குநீராடுவது பாதுகாப்பற்றது. கலிங்கதேசத்துமன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதேகுதிரை முகத்துடன் பிறந்தாள். அவள்வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம்நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள்என்று கூறப்படுகிறது.

முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர்கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம்,தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளிஎன்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம்ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய்பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின்திருவடித்தாமரையைத் தியானிக்கும்ஞானத்தைக் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரியசெல்வங்களைப்பெறுவர்.

சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம்என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத்தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிறபகைகளை விலக்கி முக்தி வழியை நாடச்செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை,காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும்பலனைத் தரும்.

 காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச்செய்தவர் அடைகின்ற பலன்களைப்அருளும்.

சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும்காண்பதற்கு அரிய உமாதேவியின்பொன்னடிகளைப் பூஜித்த பலனைப்கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்களையும் அறியத் தகுந்த அறிவைக்கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகைமுதலிய நதிகளில் நீராடிய பலனைப்பெறலாம்.

பைரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்நீராடியோர் பல புண்ணிய நதிகளில்மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

துர்கை தீர்த்தம்: சகல துன்பங்களும் நீங்கிநன்மைகிட்டும்.

ஞானதீர்த்தம்: இறைவனைப்பரவுவோருக்கும் பரவுவதற்குநினைத்தோர்க்கும் நன்மையைக்கொடுத்தருளும்.

சத்திய தீர்த்தம்: களவு, கள்ளுண்டல், குருநிந்தை, அகங்காரம், காமம்,பகை, சோம்பல்,பாதகம், அதிபாதகம், மகா பாதகம்ஆகியவற்றினின்றும் நீக்கி,  சித்தத்தைநன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம்: தேவாமிர்தமாகிய மங்களகரத்தைக் கொடுத்தருளும்.

முனிவர் தீர்த்தம்: மூழ்குவோர்ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.

தேவர் தீர்த்தம்: காமம், குரோதம், லோபம்மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி,ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம்: சாபங்களை விலக்கிஅனைத்துப் புண்ணியார்த்தங்களையும்அளிக்கவல்லது.

கந்தபுட்கரணி தீர்த்தம்: சந்திரசேகரசடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும்மேன்மையைப் பெறுவர்.

கங்கா தீர்த்தம்: இத்தீர்த்தம் முக்திக்குஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும்தெப்பம் போன்றிருக்கும்.

சேது தீர்த்தம்: சகல பாதகத்தினின்றும்நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.

கந்தமாதன தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கிபரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில்மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்றுஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாகபலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம்: இதில் ஒரு தரம்மூழ்கி எள்ளும் தண்ணீரும்இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும்சிறந்து விளங்க செந்திலாண்டவன்திருவருட் கரந்து வாழும் பதத்தைத்கொடுத்தருளுவார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டும் நிறமாறும் அதிசய லிங்கம்.!!

ஆந்திர மாநிலத்திலுள்ள அமரராமம், க்ஷீரராமம், சோமராமம், திராக்ஷாராமம், குமாரராமம் என்ற ஐந்து தலங்களையும் பஞ்ச ராமசேத்திரங்கள் என்கின்றனர்.


இவை ராமசேத்திரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவை சிவாலயங்களே ஆகும். இவற்றுள் சோமராமம் என்று அழைக்கப்படுவது மேற்கு கோதாவரி பகுதியில் குனுப்புடி என்ற கிராமத்தில் உள்ளது. இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் மேற்கு சாளுக்கிய மன்னன் பீமனால் கட்டப்பட்டது.

இங்குள்ள மூலவர் லிங்கத்தை சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. இந்த லிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது. அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த லிங்கம் பின்னர் சிறிது சிறிதாக நிறம் மாறி பௌர்ணமியன்று வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

எந்த கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன்.!!

ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் சாம்பராணி புகை போட்டு வந்தால் பல வகையான நன்மைகள் கிடைக்கும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

குங்கிலியம் என்னும் சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது, தூபம் என்று பொருள். இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

குங்கிலியம் என்னும் சாம்பராணி புகை போட்டு இறைவனுக்கு காட்டுவது, தூபம் என்று பொருள். இதனை ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்தில் செய்து வந்தால் பல வகையான நன்மைகளை அடைய முடியும். எந்தக் கிழமையில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை - ஆத்ம பலம், செல்வாக்கு, புகழ் உயரும். ஈஸ்வர அருள் கிடைக்கும்.

திங்கட்கிழமை - தேக, மன ஆரோக்கியம், மன அமைதி கிடைக்கும். அம்பாள் அருளைப் பெறலாம்.

செவ்வாய்க்கிழமை - எதிரிகளின் போட்டி, பொறாமை நீங்கும். தீய - எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான கண் திருஷ்டி கழியும். கடன் நிவர்த்தியாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். முருகப்பெருமான் அருள் கிடைக்கும்.

புதன்கிழமை - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல சிந்தனை வளரும். வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சுதர்சனரின் அருளைப் பெறுவீர்கள்.

வியாழக்கிழமை - அனைத்து விதமான சுப பலன் களையும் பெறுவீர்கள். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை - லட்சுமி கடாட்சம் இல்லத்தில் நிறையும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.

சனிக்கிழமை - சோம்பல் நீங்கும். துன்பங்கள் அனைத்தும் விலகும். சனீஸ்வரன் மற்றும் பைரவரின் அருளைப் பெறலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?

தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால், அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா?

தர்மம் நான்கு வகைப்படும்

அதில் முதலாவது சாமான்ய தர்மம். பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள  வேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான்  ராமர்.

இரண்டாவது சேஷ தர்மம்

சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர,  வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர். இதைப் பின்பற்றிக் காட்டினான் லட்சுமணன்.

மூன்றாவது விசேஷ தர்மம்

தூரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது.  இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்.

நான்காவது விசேஷதர தர்மம்

பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம். சத்ருக்னன் பாகவத உத்தமனாகிய  பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான். ஆக, இந்த நான்கு தர்மங்களையும்,  ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு  எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வைகாசி மாத பிரதோஷ விரதம்.!!

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

விசேஷங்கள் நிறைந்த வைகாசி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான வைகாசி மாதத்தில் வருகின்ற இந்த வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானே முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெற்று இறுதியில் சிவனில் கலக்கின்ற பாக்கியமும் பெறுகிறார்கள். 

வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகன் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கோவிலில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சித்ரான்னங்களை அன்னதானம் வழங்குவது சிறப்பானதாகும். இம்முறையில் வைகாசி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு பிறருடன் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீங்கும். உடல்நல குறைபாடுகள் அறவே நீங்கும். வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படுகின்ற நிலை உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ ஏற்படாது. குடும்பத்தில் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

காசியில் பிந்து மாதவராக அருள்பாலிக்கும் மகாவிஷ்ணு.!!

ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

‘மாதவா’ என்பது மகாவிஷ்ணுவை குறிப்பதாகும். ‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார். 

இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர், இந்த பிந்து மாதவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்தி காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கிறது. 

அதற்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தன யோகத்தை அளிக்கும் வசுமதி யோகம்.!!

சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. 

சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது. வசுமதி என்றால் செல்வச்செழிப்பு என்பது பொருளாகும். ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசிக்கு, சுப கிரகங்களாக சொல்லப்படும் புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உபஜெயஸ்தானம் என்ற வீடுகளான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பது வசுமதி யோகம் ஆகும். 

இந்த யோகத்தை அடைந்தவர்கள் சுய முயற்சியின் மூலம் வீடு, நிலம், வாகனம் ஆகிய நலன்களுடன் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். மேற்குறிப்பிட்ட உபஜெய ஸ்தானங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் இருந்தால் நடுத்தரமான பொருளாதார நிலையையும், ஒரு சுபக்கிரகம் இருந்தால் சாதாரண பொருளாதார நிலையும் இருக்கும் என்பது ஜோதிட விதி. சுபக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் யோகம் வலிமையாக இருக்கும். 

ஆனால், அவை நீச்சம், பகை பெற்று இருந்தால் யோகம் பெரிய அளவில் இருப்பதில்லை. வசுமதி யோகம் அமைந்தவர் வாழ்க்கையில் தனம் சேர்வது உறுதி என்பது ஜோதிட வல்லுனர் வராகமிகிரர் கருத்தாகும். அதே சமயம், அந்த சுபக்கிரகங்கள் கண்டிப்பாக பாவ கிரகங்களின் தொடர்பு பெறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோகத்தின்படி ஒருவரது ஜென்ம லக்னம் அல்லது ராசிக்கு, குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்து, சுக்கிரன் அல்லது புதன் சேர்க்கை பெற்றிருப்பது விசேஷம் ஆகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கல்யாண வரம் தரும் காளிகா பரமேஸ்வரி கோவில்.!!

காளிகா பரமேஸ்வரிக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கோவில் கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். இந்த அன்னையிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ள பெண்களிடம் உள்ளது.

இங்கு அன்னையின் சன்னிதியின் முன் மாத அமாவாசை தோறும் சூலினி பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் பில்லி, சூனியம் விலகும் என்பதும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.

இங்குள்ள அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது இந்த ஆலயம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, நகரப்பேருந்தில் மரக்கடை மற்றும் காந்தி மார்க்கெட் வரை பயணித்து, அதன்பிறகு நடந்தே சென்று விடலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡