Monday, 29 April 2019

சந்நியாசயாசம் யாருக்கு கடினம்..? யாருக்கு சுலபம்...?

நல்லவர்களாக வாழ்பவர்கள் தங்களை மகான்களாக மாற்றிக்கொள்வது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் உலகின் அத்தனை தீய செயல்களையும் செய்யும் கேடு குணம் கொண்ட ஒருவன் நினைத்தால் மிகவும் சுலபமாக மகனாக மாறி விடலாம் என்பதை உணர்த்தும் கதை இது.

கொள்ளை கும்பல் ஒன்றின் தலைவன் ஒருவன் இருந்தான்.. கொலை, கொள்ளை, பொய், புரட்டு இது மட்டுமே அவனுடைய தொழிலாக இருந்தது.. ஒருநாள் தன்னி டமிருந்த பணத்தையும், நகைகளையும் கொட்டி அடுக்கினான். எவ்வளவு பணம்... இவ்வளவையும் நாம் என்ன செய்வது? என்று யோசித்தான். பணத்தை பற்றி எண்ணும்போதெல்லாம் அவன் செய்த கொலையும்,  பறிகொடுத்தவர்களின் துன் பமும் கண்ணில் வந்து நின்றது..  இப்படி யோசித்தபடியே எதிலும் நாட்களைக் கடத்தினான். ஒருநாள்  விபரீத ஆசை ஒன்று உண்டானது.. 
அந்த ஊரில் இருக்கும்  புத்தரைப் பார்த்து அவரிடம்  சந்நியாசம் பெறவேண்டும் என்று விரும்பினான் ஆனால் புத்தரைப் பார்க்க நம்மை உள்ளேவிடமாட்டார்களே  என்று நினைத்தவன் புத்தர் வசிக்கும் இடத்துக்கு வந்து   யாரும் அறியாமல் சுவர் ஏறி குதித்தான்.. அப்போது துறவி ஒருவரின் கண்ணில் மாட்டிக் கொண் டான். அவன் திருடன் என்பதை அனைவரும் அறிந்தவர்களாயிற்றே... நேராக இவன ருகில் வந்தார்... 
”நீ மிகப்பெரிய திருடனாயிற்றே... இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டார்..   இவன் பொறுமையாக ”ஐயா, நான் இங்கு திருடவரவில்லை. நான் இப்போது திருடுவதும் இல்லை. புத்தரை நேரில் சந்திக்கவந்திருக்கிறேன்” என்றான்..  ”சரி.. அதற்கு ஏன் சுவர் மீது ஏறி குதித்து வருகிறாய்.. நேரடியாக வாசல் வரை வந்திருக் கலாமே” என்றார். ”வந்திருக்கலாம் தான் ஆனால் என்னை வாயில் தாண்டி உள்ளே நுழைய விடமாட்டார்களே” என்றான். ”சரி என்ன விஷயமாக புத்தரைப் பார்க்க வந்தாய்?” என்று கேட்டார்.  ”எனக்கு இந்த உலக வாழ்வே வெறுத்து விட்டது. இதுவரை கணக்கிலடங்கா பாவங்களைச் செய்திருக்கிறேன்.  இதிலி ருந்து விடுபட விரும்புகிறேன்.. நான் சந்நியாசியாக மாற விரும்புகிறேன்” என் றான்.. 

சூழ இருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். ”இவ்வளவு பாவங்கள் செய்த உன்னால் எப்படி சந்நியாசி வாழ்வை மேற்கொள்ளமுடியும்” என்றார்கள்.. புத்தரின் சீடர்களே நம்மை ஏற்றுக்கொள்ளாத போது புத்தரா ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்று நினைத்தவன்.. அப்பாவியாக நின்றிருந்தான்.. 
”பாவக்காரியங்களை மட்டுமே செய்த நீ இந்த இடத்தில் நிற்பது கூட பாவம் தான். முதலில் வெளியே போ” என்று விரட்டினார்கள்...இனி என்ன இருக்கிறது வாழ் வில் என்றவன் மடாலயத்தின் சுவரில்  தலையை இடித்து இறக்க முயற்சி செய் தான். அப்போது வெளியே சென்றிருந்த புத்தர் திரும்பினார். நடந்ததை அறிந்தார். ”அவ்வளவுதானே என்னுடன் வா என்று அழைத்துச்சென்று  அவனை தன்னுடன் வைத்துக்கொண்டார்.  குறுகிய காலத்திலேயே சந்நியாசி ஆகிவிட்டான் அந்தத் திருடன் எல்லோருக்கும் ஆச்சரியமாகிவிட்டது..  சீடர்களின் பார்வையைப் புரிந்து கொண்ட புத்தர்  காரணத்தை விளக்கினார்.
”நல்லவர்களுக்கு எளிதில் ஞானம் கிட்டுவதில்லை. பாவங்களின் சுமையும், தவிப்பும் அதை சுமப்பவர்களுக்கு மட்டுமே  தெரியும். அதிலிருந்து விடுபட கடுமையாக முயற்சிக்க அவர்களால் மட்டுமே முடியும். தன்னுடைய பாவக் கணக்கிலிருந்து விடுபட வேண்டும் என்னும் எண்ணமே அவர்களை அரணாக இருந்து  பக்குவத்தை உண்டாக்கிவிடும்” என்றார் புத்தர்.. 
நல்லவர்களாக இருப்பது முக்கியமல்ல.. பாவங்களிலிருந்து விடுபட நினைப்பதே முக்கியம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment