Friday, 29 March 2019

சுடலை ஆண்டவர் பெயர்.!!

சுடலைமாடசுவாமி  நாமங்களில்(பெயர்களில்) ஒன்று சுடலை மாடன். அவர் சிவ மைந்தனாய் அவதரித்ததால் சிவ சுடலை என்றும் முண்டனாக பிறந்த தால் முண்டன் என்றும் மாயங்கள் புரிந்த தால் மாயாண்டி என்றும் திருவாதிரை நட்சத்திரத்தில்  சுடர் விளக்கில் பிறந்தமையாலும் சுடலை வனத்தை காத்தமையாலும் சுடலை என்றும் ஏணி வைத்து மாலை சாத்தும் எட்டாத உயரத்தை அவர் கொண்டிருந்த தால் மா என்றால் தமிழில் பெரிய என்று பொருள் உண்டு மாடன் எனவும் சேர்த்து சுடலைமாடன் என அழைக்கப்பட்டார். மா இசக்கியை தன்னகத்தே கொண்டமையால் இசக்கி மாடன் என்றும் மந்திர சக்தியை முறியடித்து மாகாளி பெரும்புலையனை வதம் செய்தமையால் மந்திர மூர்த்தியாகவும், 61 மாடன்களுக்கு தலைவனாக விளங்குவதால் மாடன் தம்புரான் என்றும் அவரே கார்த்திகை மாத த்தில் சைவ படைப்பை ஏற்கும் போது சாந்த ரூபமாக சுடலை ஈசனாகவும் விளங்குகிறார்...

“ 🌺 *ஓம் நமசிவாய* 🌺 “
🚩🕉 _வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்_ ..🕉🚩
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
என்றும் இறைப்பணியில்🚩🚩🕉

*சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்*

_வாட்சப் குழுமம் 🕉_ 
📲 +91 9486053609

Share to all📢📢📢

Wednesday, 20 March 2019

பங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய நாள்.!!

அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பங்குனி உத்திரத்தில் குலதெய்வ வழிபாடு இரட்டிப்பு பலன்களைக் கொடுக்கும்.!!

குலம் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் குலதெய்வம் தெரியாமல் இருக்கக் கூடாது என்பார்கள் முன்னோர்கள். குலதெய்வ வழிபாடுகள் நிச்சய பலன் களைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பங்குனி உத்திரத்தில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

மகிழ்ச்சி, செல்வம், அமைதி, குடும்பத்தில் தடையில்லா சுப நிகழ்ச்சி என்னும் பேறை வழங்குவது குலதெய்வம் மட்டும்தான். வருடத்துக்கு 12 பெளர் ணமிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
வருடத்தின் முடிவில் 12 ஆம் மாதமான பங்குனியில் வரும் பெளர்ணமியின் சிறப்பு குலதெய்வ வழி பாடு.

இந்த பெளர்ணமியில் குலதெய்வத்தைத் தேடிச் சென்று வணங்கினால் பலன் மிகுதியாக இரட்டிப்பாக கிட்டும் என்பது ஐதிகம்.

குலதெய்வத்தை விட்டு வேறு ஊரில் வேற்று இடத்தில் தங்கியிருந்தாலும் வருடத்துக்கு ஒருமுறையாவது குலதெய்வ தரிசனம் செய்ய வேண்டும் என்பது முன்னோர்கள் காலத்திலிருந்து வழமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பங்குனி மாத பெளர்ணமியில் (நாளை) குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தைத் தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி திரும்புவதும் குலதெய்வத்தைத் திருப்திபடுத்தும்.
வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத் தினால் குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.
ஒருவருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் சதி செய்யும் நிலை யில் இருந்தாலும் உரிய முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் கிரகங்களால் வரும் வினைகள் அனைத்தும் நல்வினையாக மாறும்.
குலம் சிறக்கவும் குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாது காக்கும் வலிமையும் சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
பங்குனி உத்திரமான நாளை, குடும்பத்துடன் சென்று குல தெய்வத்துக்கு பூஜை செய்து வழிபடுங்கள். இரட்டிப்பு பலன்களைப் பெற்று வளமாக வாழ்வதைக் கண்கூடாக காண்பீர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருமணத்தடை நீங்க பங்குனி உத்திரம் விரதம் ஒன்றே போதும்.!!

திருமணத்தடை... இன்று பல குடும்பங்களில் மிகப்பெரிய சிக்கலாகவே இருக்கிறது. வீட்டில், மணமாகாத  கன்னிப்பெண்களும், ஆண்களும் திருமணத்தடை நீங்க கோயிலில் விளக்கேற்றுவதும், பரிகாரம் செய்வதும்  தொடர்ந்து நடைபெறுகிறது. 

 ஆனாலும், உரிய நேரத்தில்  கைகூடி வர வேண்டிய திருமணப்பேறு மட்டும்  கிட்டாமல் போகிறதே என்று கவலைகொள்பவர்கள், பங்குனி உத்திர விரதத்தைக் கடைபிடித்தால், வீட்டில் விரைவில்  மேளம் கொட்டும். 
 
பங்குனி உத்திர தினத்தில் தான், அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெற் றதாக புராணங்கள் கூறுகிறது. பங்குனி உத்திர  விரதத்துக்கு முக்கிய சிறப்புகளில் இதுவும் ஒன்று. இந்தத்  தினத்தில் தான், சிவபெருமான் - பார்வதி, ஸ்ரீராமநன் -  சீதாதேவி, முருகன் - வள்ளி, தெய்வானை  திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவலோக இந்திரன் - இந்திராணி, தட்சனின் மகள்களான,  27 நட்சத்திரங்கள் -  சந்திரன் ஆகிய கடவுள்களின் திருமண  நாளாக, இந்த பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.  

சிறப்பு வாய்ந்த முக்கிய தலங்களில் திருமண நிகழ்ச்சியாக இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். மஹாலஷ்மி விரதமிருந்து  நாராயணனின் மார்பில் குடிபுகுந்த நாளும் இந்நாள்தான். பிரம்மன் ஈசனிடம்  வரம் வாங்கி  சரஸ்வதியைத் தன் நாவில்  குடிகொண்டதும் இந்த பங்குனி உத்திரத்தில் தான். 
ஐயப்பன் அவதார மெடுத்ததும் பங்குனி உத்திரநாளில்தான். ரதியின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து சிவபெருமான் மன்மதனை உயிர்த்தெழச்செய்ததும் இன்றைய பங்குனி உத்திரத்தில் தான்.
இப்படி உருவங்களில் வேறுபாடுடைய  இறைவன்கள், தங்கள்  இறைவியோடு இணைந்த  அற்புத நாள் இந்த பங்குனி உத்திரம். இந்த நாளில் மணமானவர்கள்  ஒற்றுமையை வேண்டியும், மணமாகாதவர்கள் திருமணப்பேறு வேண்டியும் இந்த விரதத்தைக் கடைபிடிப்பது  பரிபூரண அருளை பெற்றுதரும்.

பங்குனி உத்திரத்தன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்றும் சொல்லலாம். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதியர் கூட, இந்நாளில் முறையாக விரதம் இருந்து மனமுருக சிவனையும் பார்வதிதேவியையும் மன முருக வேண்டினால் வேறுபாடுகள் மறைந்து  நீண்ட காலம் ஒற்றுமையாக  வாழ்வார்கள்.
இந்த விரதத்தின் மற்றொமொரு சிறப்பு, இந்த நாளில் மேற்கொள்ளும் விரதம், அனைத்து தெய்வங்களின் அருளையும் முக்கியமாக, குலதெய்வத்தின் அருளையும் சேர்த்து பெற்றுத்தரும் என்பது ஐதிகம். இந்துமதத்தில் தொடர்ந்து, 48 வருடங்கள் பங்குனி உத்திர விரதம் மேற்கொள்பவர்கள் பிறப்பில்லா நிலையையும், மரணமில்லா  பேறையும் பெற்று முக்தி அடைவதாக கூறுகிறது.

தம்பதியாராய் பங்குனி உத்திர விரதத்தைக் கடைபிடிப்போம்.. இறைவனது அருளைப் பெற்று ஒற்றுமையோடு வாழ்வோம்.
நினைவிருக்கட்டும்....நாளை பங்குனி உத்திரம்...