Wednesday, 20 March 2019

திருமணத்தடை நீங்க பங்குனி உத்திரம் விரதம் ஒன்றே போதும்.!!

திருமணத்தடை... இன்று பல குடும்பங்களில் மிகப்பெரிய சிக்கலாகவே இருக்கிறது. வீட்டில், மணமாகாத  கன்னிப்பெண்களும், ஆண்களும் திருமணத்தடை நீங்க கோயிலில் விளக்கேற்றுவதும், பரிகாரம் செய்வதும்  தொடர்ந்து நடைபெறுகிறது. 

 ஆனாலும், உரிய நேரத்தில்  கைகூடி வர வேண்டிய திருமணப்பேறு மட்டும்  கிட்டாமல் போகிறதே என்று கவலைகொள்பவர்கள், பங்குனி உத்திர விரதத்தைக் கடைபிடித்தால், வீட்டில் விரைவில்  மேளம் கொட்டும். 
 
பங்குனி உத்திர தினத்தில் தான், அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெற் றதாக புராணங்கள் கூறுகிறது. பங்குனி உத்திர  விரதத்துக்கு முக்கிய சிறப்புகளில் இதுவும் ஒன்று. இந்தத்  தினத்தில் தான், சிவபெருமான் - பார்வதி, ஸ்ரீராமநன் -  சீதாதேவி, முருகன் - வள்ளி, தெய்வானை  திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவலோக இந்திரன் - இந்திராணி, தட்சனின் மகள்களான,  27 நட்சத்திரங்கள் -  சந்திரன் ஆகிய கடவுள்களின் திருமண  நாளாக, இந்த பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.  

சிறப்பு வாய்ந்த முக்கிய தலங்களில் திருமண நிகழ்ச்சியாக இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். மஹாலஷ்மி விரதமிருந்து  நாராயணனின் மார்பில் குடிபுகுந்த நாளும் இந்நாள்தான். பிரம்மன் ஈசனிடம்  வரம் வாங்கி  சரஸ்வதியைத் தன் நாவில்  குடிகொண்டதும் இந்த பங்குனி உத்திரத்தில் தான். 
ஐயப்பன் அவதார மெடுத்ததும் பங்குனி உத்திரநாளில்தான். ரதியின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்து சிவபெருமான் மன்மதனை உயிர்த்தெழச்செய்ததும் இன்றைய பங்குனி உத்திரத்தில் தான்.
இப்படி உருவங்களில் வேறுபாடுடைய  இறைவன்கள், தங்கள்  இறைவியோடு இணைந்த  அற்புத நாள் இந்த பங்குனி உத்திரம். இந்த நாளில் மணமானவர்கள்  ஒற்றுமையை வேண்டியும், மணமாகாதவர்கள் திருமணப்பேறு வேண்டியும் இந்த விரதத்தைக் கடைபிடிப்பது  பரிபூரண அருளை பெற்றுதரும்.

பங்குனி உத்திரத்தன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்றும் சொல்லலாம். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதியர் கூட, இந்நாளில் முறையாக விரதம் இருந்து மனமுருக சிவனையும் பார்வதிதேவியையும் மன முருக வேண்டினால் வேறுபாடுகள் மறைந்து  நீண்ட காலம் ஒற்றுமையாக  வாழ்வார்கள்.
இந்த விரதத்தின் மற்றொமொரு சிறப்பு, இந்த நாளில் மேற்கொள்ளும் விரதம், அனைத்து தெய்வங்களின் அருளையும் முக்கியமாக, குலதெய்வத்தின் அருளையும் சேர்த்து பெற்றுத்தரும் என்பது ஐதிகம். இந்துமதத்தில் தொடர்ந்து, 48 வருடங்கள் பங்குனி உத்திர விரதம் மேற்கொள்பவர்கள் பிறப்பில்லா நிலையையும், மரணமில்லா  பேறையும் பெற்று முக்தி அடைவதாக கூறுகிறது.

தம்பதியாராய் பங்குனி உத்திர விரதத்தைக் கடைபிடிப்போம்.. இறைவனது அருளைப் பெற்று ஒற்றுமையோடு வாழ்வோம்.
நினைவிருக்கட்டும்....நாளை பங்குனி உத்திரம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment