சுடலைமாடசுவாமி நாமங்களில்(பெயர்களில்) ஒன்று சுடலை மாடன். அவர் சிவ மைந்தனாய் அவதரித்ததால் சிவ சுடலை என்றும் முண்டனாக பிறந்த தால் முண்டன் என்றும் மாயங்கள் புரிந்த தால் மாயாண்டி என்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் சுடர் விளக்கில் பிறந்தமையாலும் சுடலை வனத்தை காத்தமையாலும் சுடலை என்றும் ஏணி வைத்து மாலை சாத்தும் எட்டாத உயரத்தை அவர் கொண்டிருந்த தால் மா என்றால் தமிழில் பெரிய என்று பொருள் உண்டு மாடன் எனவும் சேர்த்து சுடலைமாடன் என அழைக்கப்பட்டார். மா இசக்கியை தன்னகத்தே கொண்டமையால் இசக்கி மாடன் என்றும் மந்திர சக்தியை முறியடித்து மாகாளி பெரும்புலையனை வதம் செய்தமையால் மந்திர மூர்த்தியாகவும், 61 மாடன்களுக்கு தலைவனாக விளங்குவதால் மாடன் தம்புரான் என்றும் அவரே கார்த்திகை மாத த்தில் சைவ படைப்பை ஏற்கும் போது சாந்த ரூபமாக சுடலை ஈசனாகவும் விளங்குகிறார்...
“ 🌺 *ஓம் நமசிவாய* 🌺 “
🚩🕉 _வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்_ ..🕉🚩
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
என்றும் இறைப்பணியில்🚩🚩🕉
*சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்*
_வாட்சப் குழுமம் 🕉_
📲 +91 9486053609
Share to all📢📢📢
No comments:
Post a Comment