பஞ்சபூதங்களை சாட்சியாக வைத்து
மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்
மாங்கல்யம் தந்துனானே – இந்த மங்கல நானை
மம -என்னுடய ஜீவன - வாழ்க்கையில் ஹேதுனா –இன்றியமையாதவளே ...
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )
சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே
த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!
என்று சொல்லப்படும் மந்திரத்தின் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்றாலும் மாங்கல்யம் என்றதும் அதை என்ன சொல்லி அணிகிறோம் என்பதை ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்.மஞ்சள் கயிறில் அணிந்தால் தான் மாங்கல்யம் பலன் தரும் என்று சொல்கிறார்கள். கழுத்து முழுக்க தங்கநகைகள் அணிந்தாலும், மஞ்சள் கயிற்றால் ஆன தாலியின் அழகுக்கு எதுவும் ஈடில்லை. அம்பாள் கோயில்களில் தரிசனம் செய்யும் போது பார்த்திருப்பிர்கள். தங்கநகைகளால் அலங்கரிக்கப்பட்டு அருள்புரிபவளுக்கு அழகை சேர்ப்பது மாங்கல்யம் சூடிய மஞ்சள் கயிறுதான். அதனால்தான் மஞ்சள் கயிறில் மாங்கல்யம் அணிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கு பஹூ சம்சாரி என்ற மற்ற பெயரும் உண்டு. இறைவனே உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தாய்தந்தையாக இருந்து பாதுகாக்கிறார். அதனால் தான் ஆண்டுக்கொரு முறை ஆலயங்களிலும் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. முன்பெல்லாம் மாங்கல்யத்தை செய்வதற்கு மங்களகரமான ஒரு நல்ல நாளை குறித்து, பொற்கொல்லரை வரவழைத்து பொன் உருக்குதல் என்னும் நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்நிகழ்ச்சியில் ஒற்றைப்பட எண்ணிக்கையில் சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து கடவுளை வணங்கி மாங்கல்யம் செய்ய தொடங்குவார்கள். தொடர்ந்து3 நாட்கள் பொற்கொல்லர் சுத்தமாக இருந்து மாங்கல்யத்தை உருவாக்குவார்.
தந்து என்றால் கயிறு என்று பொருள். மஞ்சள் பூசிய மாங்கல்ய சரடில் ஒன்பது இழைகள் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு இழைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. தெய்விக குணம், தூய்மை குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல் போன்ற 9 நற்குணங்களும்மாங்கல்யம் ஏற்கும் பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இவை அணிவிக்கப்படுகிறது. அதிகபட்ச வறுமையில் வாடும் பெண்கள் கூட மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்துகொள்வார்கள். சங்கக் காலத்தில் மணப்பெண்ணை அவளுக்குரிய ஆடவனிடம் ஒப்படைக்கும் போது அதற்கு சாட்சியாக தாலி அணிவதை வழக்கமாக கொண்டனர். தாலம் என்பது பனை ஓலையினால் செய்யப்பட்டது என்பதால் இது தாலி என்றும் அழைக்கப்பட்டது. நாளடைவில் நிரந்தரமாக அணிய வேண்டிய காரணத்தாலே தங்கத்தால் செய்து அணியும் பழக்கம் ஏற்பட்டது.
விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்துபார்த்தாலும் தாலியை மஞ்சள் கயிறில் அணிவதே மிகவும் உன்னதமாக கருதப்படுகிறது. மஞ்சள் கயிறில் தாலி அணிந்த பெண்கள் தினமும் கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதை வழக்கமாக கொள்வார்கள். மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் மணமான பெண் அடுத்து வரும் மாதங்களில் கருவுற்றாலும் தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்யம் காக்கும் அரணாக செயல்படும். நோய் தொற்றுகளை அண்டவிடாமல் காக்கும். அன்றைய பெண்கள் மார்பகப் புற்றுநோயைக் கூட அறியாமல் இருந்ததன் காரணமும் இதுதான். சீன மருத்துவத்தின் அக்குபஞ்சர் முறைப்போல பெண்களின் மார்பில் உயிரோட்டம் உள்ள இடத்தில் தாலியின் அதிர்வு நல்ல பலனை தருகிறதாம். இன்றைய காலத்தில் கருவுற்ற தாய்மார்கள் பலரும் பல்வேறு நோய்த்தொற்றால் பாதிக்கபட்டிருப்பதைக் கண்கூடாக அறிகிறோம். செல்வங்கள் எவ்வளவு குவிந்தாலும் நடமாடும் நகைக்கடையாகவே மாறினாலும் சங்கு கழுத்தை அலங்கரிக்க சாதாரணமான,அசாதாரண மகிமை உள்ள மஞ்சள் கயிறே போதும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தங்க சங்கிலியில் கோர்க்கும் தாலியை விட தழைய தழைய மஞ்சள் பூசிய தாலிக்கே மகிமை அதிகம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment