முனிகளுக்கெல்லாம் மூத்தவர் மகா முனீஸ்வரர். இவரை பெரியண்ணன், பெரியாண்டவர்,பெரியசாமி என்றும் அழைப்பதும் உண்டு.எத்தனையோ கோவில்களில் எத்தனையோ பொருட்கள் திருடு போய் இருக்கின்றன.ஆனால் எந்த தெய்வமும் அதை களவாடியவர்களை தண்டித்தது கிடையாது. காவல் தெய்மான முனீஸ்வரர் பைரவரின் அம்சம். தவறிழைத்தால் தண்டிப்பதில் வல்லவர். அவரை அண்டி சரணடைந்தால், தம்மை அண்டியவர்களை காப்பாற்றி அருள்பாலிக்கும் மகா முனீஸ்வரின் பாதம் பணிந்து நாமும் எல்லா வளங்களையும், மன நிம்மதியையும் பெறுவோம். இடைப்பாடி அருகே நவ முனிஸ்வரர்கள் கோவில் உள்ளது. சர்வசக்தி உடைய ஒன்பது முனிகள் உள்ளது . அது பற்றிய முழு விவரம் விரைவில் பதிவிடுகிறேன். ஓம் ஹ்ரீம் மகா முனீஸ்வராய நமஹ
சிவனாரின் அம்சமே ஸ்ரீமுனீஸ்வரர். முதலில் அறுவடை செய்கையில்..புதிய பொருட்கள் வாங்குகையில் முதலில் அவருக்கு வைத்து படைத்திடுக. முக்கிய வேலைக்கு செல்கையில்.. இரவு நேர காப்புக்கு.. தீவினை சக்தியிலிருந்து விடுபட.. பிரயாணத்தின் போது ஜபித்திட.. பய உணர்வு அகன்றிட..தன்னம்பிக்கை பெருகிட..உகந்த துதி இதுவே.
தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று
ஓடிப்போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து வாடிய பயிரையும்
வளரச் செய்யும் முனிஸ்வரனே போற்றி! போற்றி!போற்றி!
ஓம் சிவார்ப்பணம் முடிந்த வரை ஆயிரம் பேரை ஜபிக்க வைக்கவும்.ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் மற்றவர் படிக்க வரைந்திடுக!
முனீஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் கானக வாசாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்
ஓம் பராக்ரமாய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தந்நோ முனி ப்ரசோதயாத்.
முனீசுவரர் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும். முனீசுவரன் இந்துக்களின் கிராமியத் தெய்வங்களின் வரிசையில் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும். தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்படுகின்றது. கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர். முனி என்ற சொல் ரிக் வேதத்தில் ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்றம், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு – வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது..கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிளம்பாக காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன...
சில முனிப் பெயர்களைப்பார்ப்போம்:
முனி,
முனிரத்தினம்,
முனிராஜ்.
நாகமுனி,
வீரமுனி
ஜடாமுனி
ராஜமுனி
முனிராஜா
அருள்முனி
முனிராம்
முருகமுனி
முனிக்கருப்பன்
முனிதங்கம்
முனிவைரம்
முனீஸ்வரன்
முனீஸ்வரி
ஜெயமுனி
பொன்முனி
வெண்முனி
நாகரத்தினமுனி
சிவமுனி
மகாமுனி
சக்திமுனி
சுந்தரமகாமுனிலட்சுமி
முனிலட்சுமி
முனிகாளி
முனியப்பன்
முனியப்பு
முனியப்பா
முனிவாணி
கலைமுனி
நிலாமுனி
வான்முனி
சகாமுனி
வேல்முனி
ராஜமுனி
ராம்முனி
முனிபிள்ளையார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment