இரு மனம் இணையும் திருமணம் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான நிகழ்வு . இறைவன் போட்ட முடிச்சு வாழ்க்கை முழுவதும் இனிமையாக இருந்துவிட்டால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இறைவனின் ஆசியோடு நல்லவிதமாக முடியும். ஜாதகம் பார்த்து, நாள் நட்சட்த்திரம் பார்த்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடக்கும் இனிமையான வைபவம். வாழ்வின் இனிமை குறையாமல் பாதுகாக்க ஆலயங்களில் நடத்துவது ஆகச் சிறந்தது.
முன்பெல்லாம் திருமண வைபங்களை தங்கள் இல்லங்களில் வைத்து நடத்தினார்கள். வீட்டுக்கு முன்பு பந்தல் அமைத்து விசாலமான வாசலில் உற்றார் உறவினர்கள் சூழ திருமணம் நடந்தேறியது. இடவசதி இல்லாதவர்கள் இறைவனின் சன்னிதியில், அவன் அருளோடு ஆலயத்தில் நடத்தினார்கள். ஆலயங்களில் எந்நேரமும் பூஜைகள், ஹோமங்கள்,வழிபாடுகள் என இறைசக்திகள் சூழ்ந்திருக்கும்.இங்கு நடத்தப்படும் திருமணம் சிறப்பான பலன்களை வாழ்வில் அளிக்கும் என்பது காலங்காலமாய் நம்பப்படுகிறது.
பண்டையக் காலத்தில் மன்னர்கள் எழுப்பிய கோயில்கள் எல்லாமே ஆலயங்களில் ஆயிரம் பேர் அமரும் வகையில் ஆயிரங்கால் மண்டபங்களைக் கட்டி வைத்திருந்தனர். இறைவனது சன்னிதியில் இறைவன் சாட்சியாக நடத்தப்படும் திருமண வாழ்க்கையில் எவ்வித துன்பமும் நேராது என்று உறுதியாக நம்பினார்கள். கடவுள் சன்னிதானத்தில் திருமணத்துக்குரிய சடங்குகளும், சம்பிரதாயங்களும் உரிய முறையில் கடைப்பிடிக்கப்பட்டன. இந்துமதத்தில் நடக்கும் எல்லா சடங்குகளுக்கும் அக்னி தேவனே சாட்சியாக இருக்கிறான். அக்னி தேவன், நல்ல முறையில் நடக்கும் போது தீப ஒளியாய் நம் வாழ்வை வெளிச்சம் பெறசெய்வான். தடம் மாறி தர்மத்தை மீறும் போது அக்னியால் பொசுக்கிவிடுவான் என்றும் சொல்வதுண்டும். அக்னியால் பொசுக்குவது என்றால் தரித்தரம், நீங்காத துன்பம், துரத்தும் வறுமை போன்றவற்றை உண்டாக்குவதுதான். இத்தகைய சிறப்பு மிக்க அக்னி குண்டத்தைக் கூட ஹோமத்திலிருந்து எழும் புகை புகைப்பட அழகை பாதிக்கிறது என்று ஹோமத்தைத் தள்ளிவைக்கிறார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களின் முக்கியத்துவத்தை இழந்து ஆடம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலத்தில் வாழ்கிறோம்.
வேண்டுதலுக்காக ஆலயங்களில் நடத்தப்படும் திருமணங்களைக் கூட பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. மாங்கல்யத்தின் பலன் அதிகரிக்கவும், 16 செல்வங்களையும் பெற்று தீர்க்க தரிசியாகவும் வாழவேண்டும் என்று உற்றார் உறவினர்களுடன் இறைவனும் வாழ்த்தும் கடவுள் சன்னிதியில் திருமணம் செய்வது ஆகச் சிறந்ததே...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment