நெல்லை மாவட்டம், தென்காசி அருகேயுள்ள குடியிருப்பு கிராமத்தில் கோயில் கொண்டுள்ள வீரபாண்டி அம்மன் தன்னை வேண்டி வழிபடும் பக்தர்களுக்கு வெற்றியை தேடித் தருகிறாள். கி.பி.1760ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவள கலெக்டராக விரதல்துரை இருந்தார். இவர் வாரம் ஒரு முறையாவது குற்றால நீர்வீழ்ச்சியில் நீராடுவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் தென் காசியிலிருந்து குற்றாலத்திற்கு சாலைவசதி இல்லை. ஒற்றையடிப் பாதைதான் இருந்தது. இதனால் தென்காசிக்கும், குற்றாலத்திற்கும் இடையே சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். ஒருநாள் சாலைப்பணியை மேற்பார்வையிட குதிரையில் தென்காசிக்கு வந்தார். அடர்ந்த வனப்பகுதியில் மரச்சோலையில் இருந்த மரம் ஒன்றில் தனது குதிரையை கட்டிப்போட்டார்.
பணிகளை பார்வையிட்ட பின்னர் புறப்படுவதற்காக குதிரையை அவிழ்க்கச் சென்றார். அங்கே குதிரை இறந்து கிடந்தது. அதைக்கண்டு விரதல்துரை மிகவும் வருந்தினார். அவரை தேற்றி ஆறுதல் கூறிய அவரது காரியதரிசி அருணாசலம்பிள்ளை, ஏதேனும் விஷப்பூச்சி கடித்து குதிரை இறந்திருக்குமா என சுற்றும் முற்றும் ஆய்வு செய்து பார்த்தார். அப்படி எதுவுமே இல்லை என்பது தெளிவானது. அப்போது அசரீரி கேட்டது. ‘‘உன் துரையின் குதிரை இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தவிக்கிறாயா, இதே உருவிலான குதிரை பக்கத்து ஊரான கொற்கையில் இருக்கிறது என்றும், அதை வைத்திருப்பவன் பெயரையும் அடையாளத்தையும் கூறி, நீ போய் கேட்டால் அவன் கொடுப்பான்’’என்று கூறியது.
மேலும் அந்த அசரீரி, ‘‘என்னை உங்களுக்கு அடையாளம் காட்டவே நான் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்றும். இலஞ்சி குமார கோயில் காவல் தெய்வமாக என்னை வைத்து பூஜித்தவர்கள் இப்பொழுது என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. குமாரகோயில் அருகே பாழடைந்த கல் மண்டபத்தில் தான் இருப்பதாகவும், எனக்கு குதிரை இறந்த இடத்தில் கோயில் எழுப்பி, அவ்விடத்தில் எனது சிலை கொண்டு வந்து வைத்து நித்திய பூஜை கொடுக்கவேண்டும்’’ என்றும் அம்மன் கூறியது. உடனே, நடந்ததை விரதல்துரையிடம் அருணாசலம்பிள்ளை கூறினார். அவரின் உத்தரவையேற்று கொற்கை பகுதிக்குச் சென்றார். அங்கேயிருந்து குதிரையுடன் திரும்பி துரையிடம் வந்தார். இறந்துபோன குதிரையின் உருவத்தை ஒத்தே இருந்தது.
இந்தக் குதிரை, அதனைக் கண்டு மெய் சிலிர்த்துபோன துரை. அம்மனுக்கு கோயில் கட்ட உடனே நடவடிக்கை எடுக்குமாறு அருணாசலம்பிள்ளையிடம் கூறினார்.
அம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. அசரீரி சொன்ன அடையாளத்தில் இலஞ்சியில் இருந்த, அம்மன் சிலையை கண்டு எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தனர். வீரம் மிகுந்த பாண்டிய மண்ணில் கோயில் கொண்ட அம்மன் என்பதால் வீரபாண்டி அம்மன் என்று அழைக்கப்பட்டாள். அம்மனுக்கு தினமும் காலை, மாலை இருவேளை பூஜை நடக்கிறது. ஆண்டு தோறும் பங்குனி மூன்றாவது செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. கோயில் மூலஸ்தானத்தில் ஐந்தடி உயரத்தில் அம்மன் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். இடது காலில் மகிஷாசுரன் மிதிபட்டபடியும், வலது காலை மடித்து வைத்தும் அமர்ந்திருக்கிறாள்.
பரிவார தெய்வங்களாக விநாயகர், சுடலைமாடசுவாமி, கருப்பணசாமி, இருக்கன்குடி மாரியம்மன், இசக்கியம்மன், பேச்சியம்மன், ஸ்ரீபட்டவராயன், தளவாய்மாடன், மாடத்தி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். செய்தொழிலில் முன்னேற்றம், கல்வி வேலைகளில் வெற்றிபெற இந்த அம்மனை வேண்டி வணங்கி வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கிறது. நாகதோஷம் நீங்க புற்று அம்மனையும், நாகக்கன்னியை ஆயில்யம் நட்சத்திரத்தன்றும், பௌர்ணமி நாளிலும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர் இக்கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் முன்பு எலுமிச்சை விளக்கேற்றி எட்டு வாரங்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றும் கூறுகின்றனர். இந்தக் கோயில் தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் உள்ள குடியிருப்பு கிராமத்தில் சாலையோரத்தில் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்து மினிபஸ், ஆட்டோ வசதிகள் உள்ளன...
🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩
🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔
📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*வாட்சப் குழுமம்*
🎖 _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🎖
🏡 *இறைத்தொண்டு!* 🏡
👇🏼குழுவில் இணைய👇🏼
📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃
No comments:
Post a Comment