Saturday, 19 May 2018

திருநீறு அணிவதால் எல்லாம் கைகூடும் என்பது எப்படி ?

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.

ஆள்காட்டி விரல் நடுவிரல் மோதிர விரலால் திருநீறை தொட்டு அணிந்தால் இறையருள் கிடைக்கும் என்றும் உடல் நலம் மன நலம் ஆன்ம நலம் என்று  நம்பப்படுவதை கிரக காரக ரீதியில் சிந்தித்து பார்த்தால்

ஆள் காட்டி விரல் - குரு - முயற்சி
நடுவிரல் - சனி - கொடுப்பினை
மோதிர விரல் - சூரியன் - கடவுள்

எனவே இந்த மூன்று விரல்களால் திரு நீறை தொட்டு பூசிக்கொள்ள இறையருளால் நமது ஆணவம் கன்மம் மாயை என்ற முத்தோஷங்கள் விலகி நமக்கு  எல்லா நலமும் கிடைக்கும் என்பது கிரக காரக சிந்தனையாகிறது*

இந்த உண்மையை உணர்ந்து திருநீற்றை இட்டுக்கொள்பவர்கள் ஒருபோதும் தங்களிடம் ஆணவம் கன்மம் மாயைக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்

🕉️சிறுமளஞ்சி சுடலையாண்டவர்🕉️
   •┈┈•♨ ஆன்மீக குழு •┈┈•

No comments:

Post a Comment