நாக கன்னியின் வயிற்றில் பிறந்த உமையாளின் அம்சமான அஷ்ட காளியர்கள், சிவபெருமானிடம் முத்துவரம் உள்ளிட்ட வரங்களை வாங்கிக்கொண்டு கயிலாயத்திலிருந்து பூலோகத்தின் சொர்க்கபுரியாக திகழும் பொதிகை மலைக்கு வருகின்றனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் தனது விருப்பப்படி பூலோகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திருவிளையாடல் நடத்தி அவ்விடங்களிலேயே வாசம் செய்து, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றனர். அந்த அஷ்ட காளியரில் ஏழாவதாக அவதரித்தவள் சந்தன மாரியம்மன். சந்தனம் குளிர்ச்சியான பொருள். அதுபோல தாய் சந்தனமாரியம்மனும் பக்தர்களுக்கு இறங்கும் குளிர்ந்த மனம் உடையவள். சந்தனத்தை தனக்கு உகந்த பொருளாக கொண்டவள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளது சேரன்மகாதேவி. இந்த ஊர் முன்பு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்த பகுதியை ஆண்டு வந்த சேரமன்னனுக்கு குழந்தை இல்லை. பல கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்தும் வந்தார். ஒருநாள் மன்னன் அப்பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் நீராட வரும்போது ஆற்றின் கரையோரம் நின்ற ஒரு சிறுமி, ‘‘மன்னா’’ என்று அழைத்தாள். குரல்கேட்டு திரும்பிய மன்னன் ‘‘குழந்தாய் அழைத்தது நீயா!’’ என்று வினவினான்.‘‘ஆம், நானேதான், என் முன்னே இரு கரமேந்தி கண்ணை மூடி நில்’’ என்றாள். ‘‘என்னது மன்னர் உன் முன்னே நிற்கவேண்டுமா’’ என்றான் உடன் வந்த காவலாளி.
மன்னன் சினத்துடன் அவனைப் பார்த்து தள்ளி நிற்குமாறு கூறிவிட்டு, அந்த சிறுமி கூறியபடியே கண்ணை மூடி கரமேந்தி நின்றான். அப்போது மாங்கனி ஒன்றை கொடுத்த அந்த சிறுமி, ‘‘இந்த மாங்கனியை எடுத்துச்சென்று உன் பத்தினியிடத்தில் கொடு, குழந்தைபேறு அடைவாள்’’ என்றது. இவ்வாறு கூறிவிட்டு அச்சிறுமி அவ்விடத்திலிருந்து அகன்றாள். கண்ணை திறந்த மன்னன் சுற்றுப்புறங்களில் தேடினான். சிறுமியை காணவில்லை. அந்தச் சிறுமி கூறியபடி மன்னன் கொடுத்த மாங்கனியை உண்டதன் காரணமாக மகாராணி கர்ப்பமுற்றாள். அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இந்தக் குழந்தை ஆதி பராசக்தியின் அருளால் கிடைக்கப்பெற்றது என்றெண்ணிய மன்னன் தனது மகளுக்கு மகாதேவி என்று பெயரிட்டான். அந்த சிறுமியை கண்ட தாமிரபரணி ஆற்றங்கரையின் வேப்பமரம் அடியில் தனது வழிபாட்டு தெய்வமான சக்திக்கு பீடம் அமைத்து பூஜித்தான். நாளடைவில் கோயில் சிதைந்து போனது. பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினர் கோயிலை புதிதாக அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது பிரசன்னம் பார்க்கையில் கோயில் கொண்டிருந்தது அஷ்டகாளியரில் ஒருவரான சந்தன மாரியம்மன் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் மூலவருக்கு சந்தனமாரியம்மன் எனப் பெயரிட்டு கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது கோயிலை நிர்வகித்து வரும் சமுதாயத்தினர் கோயிலை பெரிதாகக் கட்டி புதுப்பித்துள்ளனர். எல்லா சமூகத்தினரும் வேற்றுமை பாராமல் அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
மூலவராக சந்தன மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அக்னி மாரியும், முப்பிடாதியும் ஒரே சந்நதியில் அருள்பாலிக்கின்றனர். கருப்பசாமி, சுடலைமாடன், முண்டன், காத்தவராயன் ஆகிய பரிவார தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலில் இந்த தை மாதம் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 41வது நாள் நிறைவில் பங்குனி மாதம் முதல் செவ்வாய் அன்று கோயில் கொடைவிழா நடைபெறுகிறது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கொடை விழா நடைபெறும். இக்கோயில் நெல்லையிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது. சேரன் மகாதேவி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
சேரன் மகாதேவியில் இந்த கோயில் எங்கு இருக்கிறது
ReplyDelete