சிவபெருமான் பூவுலகில் வீரசெயல் புரிந்த 8 தலங்கள் “அட்டவீரட்டானம்” என்று போற்றப்படுகிறது. இதில், சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்டதால் அதிகை வீரட்டானமாக “திருவதிகை வீரட்டானம்” திகழ்கிறது. இந்த கோவிலின் இறைவன் வீரட்டானேசுவரர், இறைவி பெரிய நாயகி. புண்ணியங்களை குவித்து முக்தியை தரும் அரிய கோவிலாக திருவதிகை வீரட்டானே சுவரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அமைந்துள்ளது.
திருவதிகை திருத்ததலம் தோன்றி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்குகெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அழித்த சிவபெருமானுக்கு திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோவில், காலத்தை வென்று நிற்கும் சிற்ப களஞ்சியமாக உள்ளது. கோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.
பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு கீழே சிந்தாமல், சிதறாமல் இருக்க அப்படியே அண்ணார்ந்து நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். திருவதிகை சிவத்தலத்தில் திருநீறு நெற்றியில் பூசும் போது தெரியாமல் கூட தலை நிமிர்ந்து அண்ணாந்து பூசமாட்டார்கள். பூசக்கூடாது. தலைகுனிந்து வந்து ஆணவம் இல்லாமல் திருநீறு பூசிக் கொள்வதால் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ஐதீகம்.
திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை வாரணாசி ஆறு என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. இங்கு அக்னி மூலையில் அமைந்த சர்க்கரை தீர்த்தம், கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சூலை தீர்த்தம் ஆகியவை பலருக்கு திருப்பங்களை தந்துள்ளது.
கோவில் திருப்பணியின் போது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வராகி அம்மன் சிலை கோவிலின் முகப்பிலே அமைத்து வழிபடுகின்றனர். உள்ளே தலவிருட்சமாக சரக்கொன்றை திகழ்கிறது. சரக்கொன்றையை சுற்றி வந்து சரக்கொன்றை நாதரை வணங்கினால் நோய் நீங்கி, புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆரோக்கியம் பெருகும். செப்பு திருமேனியாக அமைந்துள்ள ஸ்தல நாயகர் வில்லேந்திய சிவபெருமான் திரிபுர சம்ஹார மூர்த்தி மூலவர் 16 பட்டைகளுடன் விளங்கும் லிங்க திருமேனியாக காட்சி தருகிறார். வீரட்டானேசுவரர் உமாதேவியாருடன் உருவ திருமேனியாகவும் அருள்பாலித்து பக்தர்களுக்கு திருப்பம் தருகிறார்...
No comments:
Post a Comment