Tuesday, 19 May 2020

அன்னை பவனி வரும் வாகனங்கள் 4 : அழகை அருளும் மான் வாகனம்.!!

பாரத தேசத்தின் பழம்பெருமை வாய்ந்ததும், புராணங்கள் போற்றுவதுமான விலங்கு மான், உறுதிமிக்க நீண்ட மெல்லிய கால்களும் புள்ளிகள் கொண்ட உடலும்  பல கிளைகளாக உள்ள கொம்புகளையும் கொண்டது. மானின் விழிகளில் மருட்சி இருக்கிறது. சிவபெருமான் இடது கரத்தில் ஏந்தியுள்ளார். அதனால் அவருக்கு  மானேந்தி அப்பர் என்பது பெயராயிற்று

மான் அச்சத்திற்கும் அழகிற்கும் அடையாளமாக இருப்பது. மான்கள் கூட்டமாக வாழ்பவை. மான்களில் பலவகை உள்ளன. அதில் கலைமான் என்பது உயர்ந்த  வகையாகும். ஆண் கலைமான்களுக்குப் பல கிளைகளைக் கொண்ட கொம்புகள் இருக்கும்.

கலைமான் கொற்றவையான துர்க்கைக்கு வாகனமாக இருக்கிறது. பாய்ந்து வரும் கலைமானைக் கொற்றவை (துர்க்கை) வாகனமாகக் கொண்டிருப்பதால் அவள்  பாய்கலைப் பாவை என்றும் கலையதூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறாள். தஞ்சைப் பெரிய கோயிலில் அம்பிகை பவனி வர வெள்ளியாலான மான் வாகனம்  இருக்கிறது. முருகப் பெருமானுக்கும் மான் வாகனம் அமைக்கப்படுகிறது.

அன்னை பராசக்தி மான் வாகனத்தில் பவனி வருகிறாள். மகாலட்சுமி மான் வடிவில் இருந்து மகிழ்கிறாள். அதனால் மானுக்கு ஹரிணி என்பது பெயராயிற்று.  மகாலட்சுமி மான்கள் சூழ, மான் வடிவில் இருப்பதுடன், மானை வாகனமாகவும் கொண்டிருக்கிறாள். முருகன் கோயில்களில் சிலவற்றில் மான் வாகனம் உள்ளது.  காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் அழகிய மான் வாகனம் இருக்கிறது.

சந்திரனில் கலைமான் இருக்கிறது. சந்திரன், அமுதகலைகளைக் கொண்டிருப்பதைப் போலவே, கலைமானையும் வாகனமாகக் கொண்டிருக்கிறான். அவனது  தேரைப் பத்துக் கலைமான்கள் இழுத்து வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன. கொடிய புலிகள், சிங்கங்களின் மீது பவனி வருவதைப் போலவே தெய்வங்கள்  மான் மீதும் பவனி வந்து அருட் பாலிக்கின்றனர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment