Tuesday, 19 May 2020

அன்னை பவனி வரும் வாகனங்கள் 3: பக்தி வாகனம்.!!

தடி ஊன்றும் வயதிலும் நூல்களை

படி ஊன்றி; நினைவாற்றல் தரும்

எலி வாகனமுடைய ஏகதந்தன்
என்றும் துணை யாவான் நினைவில்!
 
மயில் வாகனம் மறந்தாயோ முருகா
மன வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன்
மயிலாய் எண்ணத்தோகை விரியும்
மனசாட்சியில் பிரணவம் புரியும்!
 
நந்திவாகனம் கொண்ட நாயகரே
நமசிவாய மந்திரத் தாரகரே
காளையின் உழைப்பே உலகம்
கருத்தில் கொள்வோம் கவலை விலகும்!
 
முயற்சி சிறகடித்து கருடனாய்
முன்னேறி உயரப் பறப்போம்
மூன்றடியில் உலகளந்த வாமனன்
மனம் அளந்தளிப்பான் பெற்றிடுக!
 
காலதேவனின் எருமை வாகனம்
கர்மதேவனின் காக்கை வாகனம்
தர்மதேவனின் நாய் வாகனம் -வாழ்க்கை
புதிர்களை அவிழ்க்கும் ஞானவாகனம்!
 
புலி மீது வரும் ஐயப்பனும்
குதிரை மீது வரும் சாஸ்தாவும்
வலி தீர்க்க வந்த அவதாரம்
ஒலி எழுப்பி ஒளிவீசும் ஆகாயம்!
 
சிங்கம் மீதமர்ந்து அழகுடன்
பவனி வரும் பராசக்தி
தங்க கோபுர கலசமாக
அவனி ஆளும் அருட்சக்தி!
 
தெய்வத் திருவுரு சுமக்கும்
தெய்வ அம்ச வாகனம்
வீதி உலா வரும்போது
சேதி சொல்லும் ஆகமம்!
 
மனங்களின் சங்கமத்தில் உயிர்பயணம்
மூங்கில்  மீது உடல் பயணம்
இறைவன் திருவடி நிழல் சேர
ஈடில்லா  பக்தியே வாகனம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment