Sunday, 22 September 2019

ஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்கள்.!!

ஞான பழம் கிடைக்காததால் கோபித்துக்கொண்டு ஆண்டிக்கோலம், அப்பனுக்கு உபதேசம் செய்து தகப்பன் ஸ்வாமியான கோலம், வள்ளியை மணக்க வேடனாக வந்த கோலம், சூரனை வதைக்க வேல் வாங்கி நின்றகோலம், கோபம் தணிந்து சாந்தமான கோலம்,வள்ளி, தெய்வானை சமேதராய் காட்சி தந்த கோலம், என, தமிழ் கடவுளாம், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒவ்வொன்றிற்கும் தனி சிறப்பு உண்டு. 

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் முருகனை தரிசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்களும், இதிகாச புராணங்களும் சொல்லி வைத்துள்ளதை காணலாம். 

திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
திருச்செந்தூர்: இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை  நீங்கும். மனம் தெளிவு பெறும்.

பழனி: ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.
 சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை,இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.


திருத்தணிகை : குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.
பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால்,பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை யில் நீராடுதல் மிகவும் சிறப்பு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment