ராமாயணத்தில் ‘சுந்தரகாண்டம்’ மிகவும் முக்கியமான பகுதி மட்டுமின்றி, மகத்தான பகுதி. இதைப் படிக்கப் படிக்க, நம் வாழ்வில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நன்மைகளும் உயரங்களும் கிடைக்கும் என்பது உறுதி.
சுந்தர காண்டம் முழுவதையும் ஒரே நாளில் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என, உமாசம்ஹிதையில், சிவபெருமான் தெரிவித்துள்ளார்.
சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு அத்தியாயமும், மந்திர சக்தி உள்ளவை. சுந்தர காண்டத்தை, தினமும், பக்தியுடன் படித்து வந்தால், வாழ்க்கையில் துக்கங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் மாயமாகிவிடும்.
சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும் என்பது உறுதி.
சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், மன வலிமை உண்டாகும். மனோதிடம் பெருகும். மனத்தெளிவு பிறக்கும்.
சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். ஆஞ்சநேயருக்கு வடைகளும் வெண்ணெய்யும் நிவேதனம்செய்தும், நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம்.
ஸ்ரீராமருடன் மீண்டும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்தது சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிப்பது சிறப்பு.
கர்ப்ப காலத்தில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் பெண்களுக்கு, ராம பிரானின் அருளுடன், குழந்தை பிறக்கும். ஆஞ்சநேயர் போல் அறிவாளியாக இருக்கும்.
நவமி திதியன்று விரதம் இருந்து, ஸ்ரீராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வந்தால் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயம்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால், சனியின் தாக்கத்தில் இருந்தும் பிடியில் இருந்தும் தப்பிக்கலாம்.
ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இதில் 2885 ஸ்லோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை, புதன், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வணங்கி வந்தால், திருமணம் கைகூடும்.
சுந்தரகாண்டத்தில், 41வது அத்தியாயத்தை, தினமும் குறைந்தது, மூன்று முறையாவது படித்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
காயத்ரி மந்திரத்தில் எந்த அளவு சக்தி உள்ளதோ, அதற்கு இணையாக சுந்தரகாண்டத்திலும் உள்ளது என்பார்கள்.
பூஜை அறையில், பூஜை மேடையில் சுந்தரகாண்டம் புத்தகம் வைத்து பூஜிப்பதும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பூஜையறையில் அமர்ந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது, இரட்டிப்புப் பலன்களை வழங்கும்.
சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு வேளையும் படிக்கலாம். சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்துவிட்டு, ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்தால் பாவங்கள் தொலையும். புண்ணியம் பெருகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment