Tuesday, 24 September 2019

சுப நிகழ்ச்சியில் மஞ்சள் அட்சதை பயன்படுத்துவது ஏன்?

முனை முறியாத அரிசி தான் அட்சதை, நல்ல மங்களங்களை நல்குவது மஞ்சள். இந்த இரண்டையும் இணைப்பது  பசு நெய், இது கோமாதாவின் திரவியம்.

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி, பூமிக்கு கீழ் விளையும் பொருள் மஞ்சள், இந்த இரண்டையும் இணைக்க தூய பசு நெய் தேவை.

அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்.
ஆகவே உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும் பொழுது, மணமேடைக்கு  வந்து ஒருவர் பின் ஒருவராக மணமக்களை அட்சதை தூவி ஆசி வழங்குவதே சரியான முறை.
 
சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹா லட்சுமி 
பரிபூரண சக்தி கொண்ட நெய்யினை கலந்து, உற்றார் உறவினர்கள், பெரியோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை ஆசி வழங்கும் பொழுது, அவர்களின் வாழ்வு சிறப்பாக அமையும் என்பது, சாஸ்திர உண்மை.  

திருமணம், தொழில்கள் மற்றும் சுபகாரியங்கள் அனைத்திலும், மஞ்சள் அட்சதை மூலம் பெரியோர்கள் ஆசிர்வதித்தால், அதனால், வெற்றி பெருகும். மஹாலட்சுமி, மகிழ்ச்சியுடன் இருப்பாள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment