நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய இறைவனுக்கு பூஜைகள் செய்து வணங்கி அக்காரியத்தை சிறப்பான முறையில் செய்ய தொடங்குவது மிக நெடுங்காலமாக இருந்து கடைபிடிக்கப்படும் வழக்கமாகும். மானிடர்களாகிய நமக்கு தெரிந்த உலகத்தில் அப்படி எல்லாவற்றிற்கும் முழு முதல் நாயகனாகிய கணபதி அல்லது விநாயக பெருமானையே நாம் முதல் கடவுளாக வழிபடுகிறோம். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய விநாயகப்பெருமானையே வழிபடுகின்றனர். அவருக்குரிய விநாயகர் மூல மந்திரம் இதோ.
விநாயகர் மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
மிகவும் சக்தி வாய்ந்த இந்த விநாயகர் மூல மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் துதித்து வழிபடலாம். மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையேயான ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். செல்வம் அதிகளவில் சேர துவங்கும்.
முழு முதற் கடவுள் விநாயகர்:
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு நாம் அனைவரும சற்று முன்னதாகவே அக்காரியம் செய்வதற்கான முன் தயாரிப்புகளை செய்திருப்பது அவசியமாகும். நம் வேத புராணத்திலும் இந்த பாரத மக்கள் படித்து நல்லொழுக்கம் பெற்று வாழ மகாபாரதம் என்கிற அமரக் இதிகாசத்தை இயற்ற முன்னமே தீர்மானித்திருந்தார் வேத வியாசர்.
அப்போது எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி, தனது படைப்பை இயற்ற எண்ணிய போது அந்த விநாயகப் பெருமானே அவருக்காக நேரில் தோன்றி வியாசர் கூற அந்த மஹாபாரத இதிகாசத்தை விநாயகப் பெருமானே தன் கைப்பட எழுதியதால் அந்த ஈடுஇணையற்ற இதிகாசம் இன்று வரை புகழோடு உள்ளது. அது போல நாமும் நமது வாழ்க்கைக்கு உதவக்கூடிய எந்த ஒரு நற்காரியத்தையும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கும் வழக்கத்தை கடைபிடிப்பது நல்லது இதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி வரக் கூடிய செயலாக நாம் பின்பற்றவேண்டும் இதனால் நாம் வாழ்வில் விரும்பிய அனைத்து இன்பங்களும் அந்த விநாயகர் பெருமாளின் அருள் ஏற்படும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment