நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலய இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால், வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத நுழைவு வாசலைக் கடந்ததும், வெளிப் பிரகாரத்தில் நந்தியையும், பலி பீடத்தையும் காணலாம்.
இங்குள்ள இறைவனையும் இறைவியையும் வழிபடுவதால், வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடனடியாக குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. மகாமண்டபத்தில் தனி மண்டபத்தில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு சனிக்கிழமைகளிலும், கிரக மாற்றம் ஏற்படும் நாட்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. சனிக்கிரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால், சனிதோஷ பாதிப்பின் வீரியம் கணிசமாக குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பனந்தாளில் இருந்து மணல்மேடு பேருந்து தடத்தில் கடலங்குடியில் இருந்து தெற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேசிங்கன் என்ற திருத்தலம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment