சோழ நாட்டில் எயினனூரில் சான்றோர் குலத்தில் தோன்றியவர் ஏனாதியார். அரசர்களுக்கு வாள்படை பயிற்சி அளிக்கும் ஆசிரியராய் பணிபுரிந்து வந்தார். இதன் மூலம் கிடைக்கும் பொருளை கொண்டு சிவனடியார்களுக்கு தொண்டு செய்துவந்தார். போர் பயிற்சி பெற விரும்பிய அனைவரும் ஏனாதியாரிடம் பயிற்சி கற்கவே விரும்பினார்கள். ஏனாதியாரின் உறவினரான அதிசூரன் என்பவனும் போர் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக விளங்கினார். ஆனால் பயிற்சி வேண்டி எல்லோரும் ஏனாதியாரிடமே சென்றதால் வருவாய் குறையலாயிற்று.
வருவாய் குறைந்ததால் ஏனாதியார் மீது வஞ்சம் கொண்ட அதிசூரன் கூட்டத்தோடு சென்று ஏனாதியாரை போருக்கு அழைத்தார். நாம் இருவரும் போர் புரிவோம். போரில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவரே வாள் பயிற்சி கற்றுத் தரும் உரிமையை பெற்றவராவார் என்றான் அதிசூரன். ஏனாதியாரும் அதற்கு சம்மதித்தார். போர்க்கோலம் பூண்டு வீறு கொண்டு சுழன்றார் ஏனாதியார். அவரிடம் பயிற்சி பெறும் மாணாக்கர்களும் அவரை சூழ்ந்து நின்று போர் புரிந்தார்கள். ஏனாதியாரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அதிசூரன் படைகள் சிதறி ஓடின.
தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத அதிசூரன் தனக்கு நேர்ந்த அவமானம் கருதி உறக்கம் வராமல் தவித்தான். நேரிடையாக ஏனாதியாரை எதிர்க்க முடியாது வஞ்சத்தால் தான் அவனை வெல்ல வேண்டும் என்று எண்ணினார். இம்முறை கூட்டமில்லாமல் அதிகாலையில் இருவரும் தனித்து போட்டியிடலாம் என்று ஏனாதியாருக்கு தூதுவிட்டான். சூழ்ச்சி அறியாத ஏனாதியாரும் சம்மதம் தெரிவித்தார். யாரும் அறியாமல் காலையில் எழுந்ததும் ஏனாதியார் அதிசூரன் சொல்லிய இடத்துக்கு வந்தான்.
ஏனாதியாரின் சிவத்தொண்டை அறிந்ததால் அதிசூரன் நெற்றி நிறைய விபூதியை தரித்து கையில் கேடயம், வாள் ஏந்தி வந்தான். அங்கு ஏற்கனவே வந்திருந்த ஏனாதியரை கண்டதும் கேடயத்தால் முகத்தில் நெற்றியில் பூசியிருந்த விபூ தியை மறைத்தபடி நெருங்கினார். போரை தொடங்கலாம் என்று அதிசூரன் வாளை சுழற்ற ஏனாதியாரும் சமயோசிதமாக தாக்க முற்பட்டார்.
அச்சமயம் அதிசூரன் தனது நெற்றியில் இருந்த கேடயத்தை விலக்கினார். விபூதியைக் கண்டதும் சிவனடியாராக மாறிய இவரது மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆயுதத்தை விலக்க போனார். ஆனால் உடனேயே ஆயுதம் இல்லாதவரைக் கொன்ற பழிபாவத்துக்கு சிவனடியார் ஆகக் கூடாது என்று போர் செய்பவனை போல் நின்றார்.
இதை எதிர்பார்த்த அதிசூரனும் தனது எண்ணம் போல் ஏனாதியாரை கொன்றான். அந்நிலையிலும் சிவன் நாமத்தை சொல்லி உயிர் துறந்த ஏனாதியாருக்கு பேரின்ப வாழ்வை அளிக்க தோன்றிய எம்பெருமான் அவரை உயிர்த்தெழ செய்து அவருக்கு முக்தி அளித்தார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment