தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த தவறை உணர்ந்து அதை விடுவிக்க நினைக்கும் போது மனிதன் முழு மனிதனோடு ஒத்துழைக்க வேண்டும் இல்லையென்றால் எத்தனை முயற்சி செய்தும் அவனால் அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாது.
எருமாபுரி என்னும் ஊரில் ஒருவன் இருந்தான். பகல் முழுக்க வேலை வேலை என்று உழைத்து இரவு நேரம் வந்தால் குடிக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் சிறிது சிறிதாக குடிக்க ஆரம்பித்தவன் நாளடைவில் பெருங்குடிகாரனாகி போனான். குடி பாதிப்பில் இருந்து அவனை மீட்டெடுக்க அவன் குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை மாற்ற முடியவில்லை. பகல் நேரங்களில் செய்வதெல்லாம் தவறு என்று உணர்ந்து இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வான். பொழுது சாய்ந்ததும் மீண்டும் குடிக்க தொடங்கிவிடுவான்.
ஒருமுறை அந்த ஊருக்கு வந்திருந்த ஞானி ஒருவரிடம் மக்கள் தங்கள் குறைகளை சொல்லி தீர்வு பெற்றார்கள். சந்தோஷமாக அதை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்கள். இதைக் கேட்டு அவனும் இவராவது நம்முடைய குடிப் பழக்கத்தை நிறுத்துகிறாரோ என்று பார்ப்போம் என்றபடி அவரை தேடி சென்றான்.
“வணக்கம் சாமி, எல்லோருடைய குறையையும் தீர்த்து வைக்கிறீங்களாமே என்னோட குறையையும் தீர்த்து வையுங்களேன்” என்றான். ஞானி புன்னகைத் தார். பிரச்னைகளுக்கு தீர்வை பிரச்னைகளை அனுபவிப்பவர்களே வைத்திருக்கிறார்கள் அதனால் யாருக்கும் நான் தீர்வு சொல்வதில்லை. இறைவனே வழி காட்டுகிறான் நான் ஒரு பாலமாக இருக்கிறேன் அவ்வளவுதான்” என்றாவர் உன்னுடைய பிரச்னையை சொல்லு.
என்னால் முடிந்தால் நான் வழிகாட்டுகிறேன்” என்றார். ”என்னிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. தினமும் அளவுக்கு மீறி குடிக்கிறேன். அதை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்” என்றான். ஞானி சிறிது நேரம் யோசித்தார் இன்று மாலை வந்து என்னை பார் என்றார்.
சொன்னது போல் மாலை வந்தான். ஞானி தன்னுடைய கால்களை கயிறு கொண்டு கட்டி வைத்திருந்தார். இவனைக் கண்டதும் ”என்னை விடு என்னை விடு” என்று கத்தினார். தீர்வு கேட்க வந்த குடிகாரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சாதாரண கயிறு காலில் கட்டியிருக்கிறது. அதை எடுக்க தெரிய வில்லை. அதை விட்டு என்னை விடு என்னை விடு என்று கத்துகிறாரே என்றவன் ஞானியைப் பார்த்து ”என்ன நீங்கள்.. கயிறின் பிடியை நீங்கள் தானே பிடித்திருக்கிறீர்கள். அதை விட்டால் சரியாகி விடப்போகிறது. அதை விட்டு விட்டு என்னவோ விடு விடு என்று புலம்புகிறீர்களே” என்றான்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment