Thursday, 16 May 2019

சனி மஹா பிரதோஷம்! சிவபெருமானை தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இறைவன் சிவபெருமானை நாள்தோறும் வணங்கிவந்தாலும், பிரதோஷ வழிபாட்டுக்கு தனி மகிமை உண்டு என்பார்கள்.


தினமும் சிவபெருமானை வணங்கிவந்தாலும், பிரதோஷ தினத்தில் வணங்குபவர்களுக்கு அத்தனை துன்பங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அது என்ன பிரதோஷம்?
இறைவன் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நேரம்தான் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டு பாற்கடலைக் கடைந்த போது திருமகள், ஐராவதம், காமதேனு, கறபகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. 

அந்த விஷத்தால் அனைத்து உயிர்களும் ஆபத்தான நிலையை அடைந்தன. ஆபத்தில் ஆழ்ந்த உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவர் கழுத்தைப் பிடித்தார். அதனால் விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலே நின்றுவிட்டதால் நீலகண்டனார் என்று போற்றப்படுகிறது. 
அவர் விஷம் அருந்திய நேரம்தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் இறைவனுக்கு குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பால், தேன்,தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். 
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம்  பிரதோஷ காலம் எனப்படுகிறது. அதிலும் சனி பிரதோஷம் கூடுதல் மகிமை கொண்டது. 
சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை.எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில்  மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம். சனி பிரதோஷம் அன்று  செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன
பிரதோஷ விரதம்
பிரதோஷ தினத்தில் இறைவனை தரிசனம் செய்யும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷத்தைவிட அதிக லாபம் தரக்கூடியது என்பது ஆன்மிக நம்பிக்கை.
நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்றும் சொல்லப்படுவது உண்டு. அதனால் நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிக்க வேண்டும் என்றும் சொல்லப்படுவது உண்டு. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
அன்று கோயிலிற்கு சென்று வழிபடுவதால் சனியால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் விலகி செல்லும். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபட்டால் சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற பிரச்சனைகள் விலகும். ஒரே ஒரு சனி பிரதோஷத்தன்று சிவன் கோயிலிற்கு சென்றால் ஐந்து ஆண்டுகள் சிவன் கோயிலிற்கு சென்ற பலன்களை பெறலாம். அதனால் சனி மகா பிரதோஷம் அன்று கோயிலுக்குப் போக மறக்காதீங்க...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment