இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி.
இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி. அவளை மகாகவி காளிதாசர், பாஸ்கர ராயர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் வணங்கி அருள் பெற்றனர் என்பது வரலாறு. தச மகா வித்யைகளுள், மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யா ரூபம் ஆவாள். சரஸ்வதியின் சொரூபமாக உள்ள சியா மளாதேவி வழிபாடு என்பது, சங்கீதத்தில் ஒருவரை பிரபலம் அடையச்செய்யும் என்பதும் ஐதீகம்.
அம்பாளின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி -சியாமளா சக்தி பீடமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் ராஜ சியாமளா தேவியின் அழகிய உருவத்தை தரிசனம் செய்யலாம்.
புதுக்கோட்டை புவனேஸ்வரி கருவறைக்கு முன்புறத்தில் ராஜ மாதங்கியை தரிசனம் செய்யலாம்.
சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறைக்கு முன்புறம் நின்ற கோலத்தில் மாதங்கியை தரிசிக்கலாம்.
சேலம், மன்னார்பாளையத்தில் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் ராஜ மாதங்கி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர், செம்பாக்கம் ஸ்ரீ பீடம் பாலா சமஸ்தானத்தில் ராஜ மாதங்கி கோவில் இருக்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment