Friday, 24 May 2019

பில்லி சூனியம், துன்பம் அகற்றும் கால பைரவர்.!!

அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும்.

பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்.கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும்.பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும் திருமணத்தடை நீங்கும்.பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி பெரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம் என்னும் மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment