கிருஷ்ணரால் சீராட்டப்பெற்ற பலராமரை, பலத்தின் கடவுளாகவும், யதுகுலம் எனப்படும் யாதவ குலத்தை காப்பவராகவும் எண்ணி வழிபடுகின்றனர். பலராமரின் சரிதம் மதுராவைச் சுற்றி நிகழ்ந்ததால் மதுராவில் தொடங்கிய வழிபாடு, படிப்படியாக இந்தியா முழுவதும் பரவியது.
புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் கண்ணன், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகிய உடன்பிறப்புகளே மூல மூர்த்திகளாக இருந்து அருள்பாலிக்கிறார்கள். வட இந்தியாவில் பல இடங்களில் உள்ள கிருஷ்ணர் ஆலயங்களில் பலராமருக்கான சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. மதுராவிலும் ஒடிசாவில் கேன்டாபாரா என்னும் இடத்தில் பலராமருக்கு தனிக்கோவில் ஒன்று இருக்கிறது.
தமிழ்நாட்டில் நாச்சியார்கோவில் சீனுவாசபெருமாள் கோவிலில் சங்கர்ஷனர் என்ற பெயருடன், கருவறையில் இருந்தபடி பலராமர் அருள்பாலிக்கிறார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment