இந்த ஆண்டு அட்சய திருதியை தினமான இன்று ராஜமாதாங்கி ஜெயந்தி வந்துள்ளது. இந்த தேவி, அவதாரம் செய்த நாளே மாதங்கி ஜெயந்தி என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ராஜமாதாங்கி ஜெயந்தி தினமும் வருகிறது. மகாவிஷ்ணுவுக்கு தசாவதாரம் இருப்பதைப் போல் அம்பாளுக்கும் பத்து அவதாரங்கள் உண்டு. அவற்றில் ஸ்ரீ மாதங்கி என்னும் வடிவமும் ஒன்று.
மதங்கர் என்னும் மகரிஷிக்கு அருட் செய்ததால் இந்த அம்பாளுக்கு மாதங்கி என்றும் ராஜ மாதாங்கி என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த தேவி, அவதாரம் செய்த நாளே மாதங்கி ஜெயந்தி என்று கூறப்படுகிறது.
மாதங்கி என்னும் அம்பாள் ரத்னமயமான பீடத்தில் கிளியின் மழலைச் சொல்லை ரசிப்பவளாக கருப்பு வர்ணத்துடன் தனது ஒரு காலை தாமரையின் மீது வைத்துக் கொண்டு, சிரசில் சந்திரனை தரித்துக் கொண்டு வீணையை வாசித்து கொண்டு புஷ்ப மாலையுடன் சிவப்பு பட்டு உடுத்தி, நிறைய ஆபரணங்கள் அணிந்து கொண்டு காட்சி தருகிறாள்.
அட்சய திருதியை தினத்தன்று ஸ்ரீ ராஜமங்கி தேவியின் படத்தை வைத்து ஆவாகனம் செய்து ரோஸ் கலரில் உல்ள ரோஜாப்பூ போன்ற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். தேன் கலந்த பால்பாயாசம் நிவேதனம் செய்து, மாதங்கி சுலோகத்தை சுமார் 21 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம், படிப்பு, வசியம் சங்கீதம் ஆகிய நான்கு விதமான பலன்களும் ஏற்படும். குறிப்பாக சங்கீத வித்தையில் ஈடுபடுபவர்கள் தேர்ச்சியான அறிவை பெற்று புகழுடன் பிரகாசிக்கலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment