Thursday, 18 April 2019

திருமண தடை நீக்கும் கோவில்.!!

திருமண தடை உள்ளவர்கள் திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோவில். பொதுவாக ராமர் கோயில்களில் ராமர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இந்த வல்வில் ராமர் கோயிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி புஜங்க சயன கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் சயனித்தவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 

நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோயிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட திருமண தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் இருக்கும் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் வாக்காக இருக்கிறது.

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புள்ள பூதங்குடி என்கிற ஊரில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment