இந்து சமயத்தில் பல தெய்வ வழிபாட்டு முறை இருந்தாலும், அவற்றில் விநாயகர் மூல முதற்கடவுளாக வணங்கப்படுகிறார். பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயம் வடக்கு பார்த்த சன்னிதியில் குடவரைக் கோவிலாக விளங்குகிறது.
ஆறு அடி உயரம் கொண்ட விநாயகர், சிறு குன்று போன்ற பாறையில் குடைந்த புடைப்புச் சிற்பமாக அர்த்த பத்மாசனத்தில் பிரமாண்ட உருவமாக காட்சி தருகிறார். விநாயகரின் தும்பிக்கை, வலதுபுறம் திரும்பி ‘வலம்புரி விநாயகராக’ அருள்புரிகிறார். இங்கு அம்பாள் ‘வாடாமலர்’ என்ற பெயருடனும், ஈசன் ‘அர்ச்சுனவனேஸ்வரர்’ என்ற பெயருடனும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.
இங்கு புதுக் கணக்கு பூஜை போடவும், புதிய செயல் தொடங்கவும் வரும் பக்தர்கள் ஏராளம். ஆயுள் விருத்தி பூஜை, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்துகொள்வதும் சிறப்பு என்பதால், இந்த ஆலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment