கேட்டதெல்லாம் தருமாமே கற்பக விருட்சம் என்னும் மரம்.. அதுபோல் கேட்டதெல்லாம் தருவதற்கு ஒரு பணியாள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தான் மானிடப்பிறவி.. ஆசைப்படுவதும்... அவஸ்தைப் படுவதும் மனிதப்பிறவிக்கு புதிதா என்ன?
மாஞ்சோலை என்னும் நாட்டில் பூங்குன்றன் என்னும் ஒருவன் இருந்தான்... இந்நாட்டில் அரசனை விட பெரிய அளவு செல்வமும் புகழும் பெற வேண்டும் என்னும் ஆவலைக் கொண்டிருந்தான். காட்டில் வசிக்கும் தேவதையிடம் இதுகுறித்து கேட்டான். “எங்கள் தேவதைகளின் அரசியை நினைத்து தவம் செய்... அவர்கள் கருணை செய்தால் உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் கள்” என்றது... சரி என்று அவனும் உண்ணாமல் உறங்காமல் தேவதையின் மந்திரத்தை உச்சரித்தபடி தவம் இருந்தான்... அவனது தவத்தை மெச்சிய மூத்த தேவதை அவன் முன் தோன்றியது. “உனக்கு வேண்டிய வரம் கேள். மகிழ்ச்சி யாக தருகிறேன்” என்றது...
“நான் கேட்கும் வரம் ஒன்றே ஒன்றுதான்.. எனக்கு தேவையானதை விரும்பும் போதெல்லாம் நேரில் தோன்றி நீ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்றான்... “அது முடியாத காரியம் வேண்டுமானால் கேட்டதெல்லாம் தரும் பூதம் ஒன்றை உன்னுடன் வேண்டுமானால் அனுப்புகிறேன்... அதற்கு வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் உன்னை விழுங்கிவிடும்.. அத னால் நீ நாளை இதே இடத்துக்கு வந்து உன்னுடைய முடிவை சொல்.. வேண்டு மெனில் பூதத்தை உன்னுடன் அனுப்புகிறேன். இல்லையென்றால் வற்றாத செல்வம் அருளுகிறேன்” என்று சொல்லி மறைந்தது..
இரவு முழுவதும் யோசித்தான்.. வற்றாத செல்வம் இருந்தால் நல்லதுதான் ஆனால் எப்படி அரசனை விட செல்வம் கிடைக்கும் அதனால் எப்போதும் தேவையைப் பூர்த்தி செய்ய ஆள் இருப்பது நல்லதற்குதான் என்று முடிவு செய்தான். தன் முடிவையே மூத்த தேவதையிடம் சொன்னான். “உன் விதி இதுதான் என்றால் நான் என்ன செய்யமுடியும்” என்று வரம் அளித்தது…
பூதத்தை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.. அரசனை விட அதிக செல்வத்தோடு அரண்மனை கேட்டான்… “அப்படியே ஆகட்டும்” என்று பூதமும் கொடுத்தது.. இப்படியே கேட்டதை அடுத்த நொடியே கொடுப்பதால் பூதத்துக்கு வேலை கொடுக்கமுடியாமல் திணறினான்… வேலைக்கொடு வேலைக்கொடு என்று பூதம் அவனை விரட்டியது.. வேண்டியவற்றை அனைத்தும் பெற்றுவிட்ட அவனுக்கு பூதத்துக்கு வேலை கொடுக்க முடிய வில்லை… 24 மணிநேரத்துக்குள் வேலை கொடுக்காவிட்டால் பூதம் உன்னை விழுங்கிவிடும் என்ற நிபந்தனை வேறு அவனை விரட்டியது..
மறுநாள் தேவதையிடம் சென்றான். “என்னால் பூதத்துக்கு தீனி போட முடியவில்லை… அதனால் பூதத்தைத் திரும்ப அழைத்துக்கொள் பதிலுக்கு வற்றாத செல்வம் கொடு” என்று அழுதான்… “ஒருமுறை கொடுத்த வாக்கை திரும்ப பெறமுடியாது. அதனால் தேவையெனில் பூதத்தை வைத்துக்கொள் .. இல்லாவிட்டால் எல்லாமே இழந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவாய்” என்றது….
“ஐயையோ உன் செல்வமும் வேண்டாம்.. பூதமும் வேண்டாம் நீயே வைத்துக் கொள்” என்று சொல்லியபடி உள்ளதும் போச்சே என்று அழுதபடி திரும்பி பாராமல் கண்காணாமல் ஓடிவிட்டான். அதனால்தான் ஆசைக்கு அளவுண்டு என்று சொன்னார்கள் போல...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment