ஹோமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஹோம பூஜை வகையாக “சரபேஸ்வரர் ஹோமம் பூஜை” முறை இருக்கிறது.சரபேஸ்வரர் ஹோமம் எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.
ஹோமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஹோம பூஜை வகையாக “சரபேஸ்வரர் ஹோமம் பூஜை” முறை இருக்கிறது. சரபேஸ்வரர் மூர்த்தி எப்படிப்பட்ட தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை கொண்ட தெய்வமாக விளங்குகிறார். அவரை வழிபட்டு நன்மைகள் பெறுவதற்காக செய்யப்படும் ஒரு ஹோமம் தான் சரபேஸ்வரர் ஹோமம் ஆகும்.
சரபேஸ்வரர் ஹோமத்தை அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கொண்டு செய்வதே சாலச் சிறந்ததாகும். இந்த ஹோமத்தை வீட்டிலேயே செய்யலாம் என்றாலும் தமிழ்நாட்டில் திருபுவனத்தில் இருக்கும் அருள்மிகு சரபேஸ்வரர் கோயிலில் செய்வது நிச்சயமான பலன்களை அளிக்க வல்லதாக இருக்கிறது.
சரபேஸ்வரர் ஹோமம் பூஜையை செய்வதன் பிரதான நோக்கமே கண் திருஷ்டிகள் மற்றும் நம்முடைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, ஏவல் போன்றவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நீக்கி நன்மைகளை பெறுவதற்காக தான்.
மேலும் இந்த ஹோமம் பூஜை செய்து கொள்வதால் நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். கடன் தொல்லைகளிலிருந்து நீங்குவதற்கான வழிகள் பிறக்கும். திருமணத் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கி சிறந்த வாழ்க்கை துணை கிடைக்கப் பெறுவார்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment