Friday, 26 October 2018

மயிலேறும் பெருமான் சாஸ்தா.!!

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வரதராஜபுரத்தில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகில் இருக்கும் நளங்குடியில் ஏழு அண்ணன்மார்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் கன்னியம்மா. அழகான தோற்றம் கொண்ட இவளைத் திருமணம் செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர் ஒருவர் கட்டாயப்படுத்தினார். விரும்பாத சகோதரர்கள் ஆட்சியாளரின் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்பதை எண்ணி நளங்குடியில் உள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா கோயில் சன்னதி அருகில், குழி தோண்டி உயிருடன் தங்கை கன்னியம் மாளை புதைத்து விட்டனர். அந்த இடத்தில் தங்கையின் ஞாபகார்த்தமாக "பாதாள கன்னியம்மன்' என்ற பெயரில் கோயில் கட்டி வழிபாடு நடத்தினர். இந்த அம்பாளுக்கு அம்மனுக்கு தினமும் இரண்டு கால பூஜை நடந்து வருகிறது.
திருமண தடை நீங்க நிவர்த்தி: நெடுநாட்களாக திருமணம் தடைப்படுபவர்கள் சுவாமிக்கும், பாதாள கன்னியம்மனுக்கும் விஷேச அலங்கார பூஜை நடத்தி பக்தர்களுக்கு பழம் வழங்குகின்றனர். பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்றவற்றிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். பாதாள 
கன்னியம்மனுக்கு பங்குனி உத்திரத்தன்று தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து பூஜையும் சிறப்பு தீபாராதனைகளும் நடக்கும். இந்த சாஸ்தாவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பக்தர்கள் உள்ளனர். 
கோயில் அமைப்பு: மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா, முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்கள் உள்ளன. சுடலைமாட சுவாமியும் சைவபடைப்பை ஏற்றுக்கொள்கிறார். சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரிய வரவில்லை. விநாயகர், நாகராஜா ஆகியோருடன் வீரபத்திரர், பிணமாலை சூடும் பெருமான், நல்லமாடசுவாமி ஆகிய காவல் தெய்வங்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர். 
கிராமியப் பாடல்: இந்தப் பெருமானை கிராமியப்பாடல் ஒன்றைப் பாடி பக்தர்கள் வணங்குகின்றனர்.
மயிலேறும் பெருமானே!
மக்களைக் காப்பாயே!
குயில் கூவு பனை சூழ் நளமாக குடியில்
வரதராசபுரக் கிராமம் வரமருள் பரமா!
திருவைகுண்டம் பாசானம்
வடகால் வடபுறம் வீற்ற வரதா
திடமான நெஞ்சு திகழ வைப்பாய்! 
நளங்குடி குணபால் நாதா!
அமர்ந்தாய் வளவயல் கதிர்கள் 
ஆலவட்டம் செய்யும்மே
திருவிழா: பங்குனி உத்திரத் திருவிழா, பவுர்ணமி பூஜை, கார்த்திகை தீபம், சித்திரை வருடபிறப்பு, தைப்பொங்கல்.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் சென்று, ஏரல் ரோட்டில் 6 கி.மீ., மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் வரதராஜபுரத்தை அடையலாம்.
திறக்கும் நேரம்: காலை 9 - 12.30, மாலை 4- இரவு 6.30 மணி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment