கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது கொழுமம் மாரியம்மன் ஆலயம். இங்கு அருளும் சுயம்பு மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் வித்தியாசமாகக் காட்சி தருகிறாள். அம்மனுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்மனாகவே பாவிக்கப்பட்டு புடவை கட்டி அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. கருவறையில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மாரியம்மன் அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கி வீற்றுள்ளாள். புதியதொழில் தொடங்கும்போதும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில் பூ வைத்து உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை செயல்படுத்தும் பழக்கம் இப்பகுதியில் நடைமுறையில் உள்ளது.
ஒருமுறை இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவ கல் ஒன்று சிக்கியது. அதனை கரையில் போட்டுவிட்டு மறுபடியும் மீனவர் வலையை வீசினார். திரும்பவும் அதே கல்லே வலையில் சிக்கியது. மீனவர் மீண்டும், மீண்டும் வலைவீச, அந்தக்கல் வந்துகொண்டே இருந்தது. பயந்துபோன அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்பிகை, ‘ஆற்றில் லிங்க வடிவில் உனக்கு தரிசனம் தந்தது நான்தான்’ என்றாள். மீனவர் இத்தகவலை ஊர் மக்களிடம் கூறினார்.
மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் கல்லை தேடியபோது கிடைக்கவில்லை. ஓரிடத்தில் கல் மண்ணில் புதைந்து சிறிய புடைப்பு போல வெளிப்பட்டிருந்ததைக் கண்டு அவ்விடத்தில் தோண்டினர். எவ்வளவோ தோண்டியும் அடிப்பாகத்தை காண முடியவில்லை. பின் அங்கேயே அம்பாளுக்கு கோயில் கட்டினர். கல் லிங்கம் போல இருந்ததால் அப்படியே பிரதிஷ்டை செய்து அந்த சிவலிங்க வடிவையே அம்பாளாக பாவித்து பூஜைகள், விழாக்கள் நடக்க ஆரம்பித்தன. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கொழுமம் என்ற ஊரில் உள்ள இந்த ஆலயத்திற்கு பழனியிலிருந்தும், உடுமலைப்பேட்டையில் இருந்தும் பேருந்து வசதி உண்டு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment