Tuesday, 17 July 2018

கோலவிழியம்மன் திருக்கோவில்

மயிலையின் மைய தெய்வங்களில் இவளும் ஒருவள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஆலயம் என்பதை கோலவிழியம்மனின் உற்சவ திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்திருக்கிறார்கள். சோழர் காலத்திய ஆலயம். திருமயிலையின் கிராம தேவதையாக பேரருள் புரிந்து வருகிறாள் இந்த அன்னை. சுனாமி வந்த போது கடற்கரையோரம் வசித்த மக்கள் ஓடி வந்து தஞ்சம் புகுந்தது இந்த அன்னையின் ஆலயத்தில்தான். ஒரு சமயம் கயிலங்கிரியில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்த போது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகில் கவனம் செலுத்தினாள் உமை. அதனால் கோபம் கொண்ட ஈசன் தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான். பூவுலகில் திருமயிலையில் அன்னை மயிலுருவாய் மாறி ஈசனை துதித்து வந்தாள். 

அப்போது, இப்பகுதியில் தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தன. நல்லோர் பாதிக்கப்பட்டனர். அதனால் ஈசன் மகாகாளியை மயிலையின் காவல்தெய்வமாய், மயிலுக்கும் காவலாய் அமர்ந்து எல்லையையும், பக்தர்களையும் காக்க ஆணையிட்டான். ஈசனின் ஆணைப்படி மயானத்தை நோக்கி அமர்ந்தவண்ணம் அருளைவாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள் கோலவிழியம்மன். இறைவிக்கு முன் கல்லினாலான சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அபிஷேகங்கள் எல்லாம் இந்த தேவிக்கே நடைபெறுகின்றன. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக் கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். மயிலையில் கோபதி நாராயணசாமி சாலையில் இந்த ஆலயம் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment