குமரி மாவட்டத்தில் உள்ள நாஞ்சில்நாடு பகுதி ஒரு மருதநில பகுதியாகும். மருதநில கடவுள் இந்திரன் என்பதால் இப்பகுதியினர் இந்திரனை ஒரு தெய்வமாக போற்றி வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் குமரியில் பிரபலமான மருந்துவாழ்மலையின் வடக்கு பாகத்தில் அமைந்துள்ளது தேவேந்திரனுக்கான குடைவரை கோயில். இங்கு இந்திரன் சிவனை நோக்கி தவம் செய்யும் திருக்கோலத்தை காணமுடியும். இக்கோவில் தரையில் இருந்து சுமார் 300 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட குடைவரை கோவிலாகும். பாறையில் நிற்கும் கோலத்தில் தேவேந்திரன் சிலை தவக்கோலத்தில் காட்சியளிக்கிறது. சிவன், விநாயகர், கோரக்க முனிவர், வெள்ளையானை வடிவில் இந்த குடைவரை கோவிலில் காட்சியளிக்கின்றனர். அருகில் வற்றாத சுனையும் உள்ளது.
கவுதம முனிவரால் சாபம் பெற்ற இந்திரன் சாபவிமோசனம் வேண்டி தவம் இருப்பதற்காக மருந்துவாழ்மலையின் வடபகுதிக்கு ஐராவதம் என்னும் யானை மீதேறி வந்தான். பின்னர் மலையில் அமர்ந்து தனது குருவை நினைத்து தவத்தில் அமர்ந்தான். அப்போது தனது ஞானக்கண்ணால் சித்த தீர்த்தம் இருக்கும் இடத்தை அறிந்த தேவேந்திரன், ஐராவதம் யானையிடம் தீர்த்த சுனை உண்டாக்க கட்டளையிட்டான். அதன்படி யானையும் தனது துதிக்கையாலும், கொம்பாலும் தீர்த்த சுனையை உண்டாக்கியது. சுனையில் நீர் பெருகி வற்றாத வளம் பெற்று திகழ்ந்தது. இந்த தீர்த்தத்தில் அமாவாசை, பவுர்ணமி திதிகளில் தீர்த்தமாடினால் பித்ருக்களால் நன்மையும், நாம் செய்த பழிபாவங்களும் தீரும் என்று சுசீந்திரம் தலப்புராணம் கூறுகிறது.
மேலும், அந்த இடத்தில் யானை தன் முன்னங்கால்கள் இரண்டையும் முழங்கால் மடித்து ஊன்றி பின்னங்கால்களை மலையில் பதித்து நிற்பது போன்ற தோற்றம் மலையில் தற்போதும் காட்சிதருவது தனிசிறப்பாக அமைந்துள்ளது. பக்தர்கள் அந்த யானையின் காலை சுற்றி வருவதற்காக குகை போன்று அமைந்திருக்கும் யானைக்காலுக்குள் படுத்து ஊர்ந்து வலம் வருகின்றனர். இவ்வாறு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும், கேட்டது கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்ற நம்பிக்கை அங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
முன்பு இக்கோவில் எந்தவித படிக்கட்டுகளும் இன்றி உச்சிக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாய் அமைந்திருந்தது. பின்னர், இக்கோவில் செல்லும் மலை பாதையில் பாறைகளை படிகள் போல் செதுக்கி அமைத்துள்ளனர். மேலும், பாதுகாப்பிற்காக இரும்பு கம்பிகளால் கைப்பிடியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஏராளமான வௌியூர் பக்தர்கள் மலையேறி வந்து தேவேந்திரனின் அருள்பெற்று செல்கின்றனர். முன்பு இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பூஜைகள் நடைபெற்றன. தற்போது தினசரி காலை, மாலை இருவேளை கோவில் நடைதிறந்து பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அன்னதானத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கார்த்திகை தீபவிழா இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment