Monday, 22 June 2020
சண்முகனை துதிப்போம்.!!
மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?
இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க.!!
Sunday, 21 June 2020
புத்திர தோஷம் நீங்க உடனடி பலன் தரும் பரிகாரம்.!!
இந்த மாதிரி கோலம் போட்டால் கடன் பிரச்சனை கட்டாயம் குறையாது தெரியுமா?
பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..!? அப்போ இதயும் கவனியுங்க.!!
1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
4. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
5. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்.
6. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
7. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
8. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
9. முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
10. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
11. பூஜைக்கு தங்கள் பிறந்த நட்சத்திரம், ஜென்மானுஜன்ம நட்சத்திரம், அல்லது அமாவாசை, பவுர்ணமி, சித்திரை 1 போன்றவை உகந்தவை.
12. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் தீட்டு வீட்டிற்கு செல்லாதீர்.
13. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
14. காலை அணிந்த உடையை மாலை நேர பூஜைக்கு அணியாதீர்.
15. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
16. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது. அங்கே அதிகம் பேரம் பேச வேண்டாம்.
17. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
18. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
19. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
20. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
21. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
22. நெய் அல்லது எண்ணையை மற்றவர்கள் விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
23.. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
24. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
25. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
26. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.
27. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
28. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
29. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
30. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
31. கஜ பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
32. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
33. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
34. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
35. சங்கல்பம் மிக முக்கியம்.
36. கோபுர தரிசனம் கோடி நன்மை.
37. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக அவரருகே சென்று மனதினுள் ‘சிவயநம’ என முடியும் அளவு கூறி வழிபடுவதே நன்று . அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் எப்போதும் இருப்பவராதலால் கையை தட்டவோ சொடுக்குப் போடவோ வேண்டாம்.
38. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
39. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
40. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
41.தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 35 வயதிற்குள் செய்து விடுங்கள்.
42. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
43. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே முறையான பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
44. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
பதஞ்சலி முனிவர் அருளிய குபேர சிந்தாமணி மந்திரம்.!!
குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள்.
நாம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பலவகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன. காயத்ரிமந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரம். கேட்டதைத் தரும் சிந்தாமணி என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து செல்வம் செழிக்க அருள்புரிவார்.
குபேர சிந்தாமணி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம்
உனபதுமாம் தேவஸக |
கீர்த்திஸ்ச மணினா ஸக:
ப்ராதுர் பூதேஸ்மி ||
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்
வருத்திம் ததாதுமே |||
ஓம் குபேராய ஐஸ்வர்யாய
தனதான்யாதிபதயே
தன விருத்திம்
குருகுரு ஸ்வாஹா! ||||
அதிகாலையில் ஜெபம் செய்து வர வீட்டிலும், தொழிலிலும், செல்வம் சேரும்..
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்.!!
பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.
பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
வில்வ இலையை பறிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.!!
வில்வ இலையை பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக நினைத்துக் கொண்டு கீழ்காணும் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸுர விஷவைத்யஸ்ய ஸும்பஸ்ய கருணாநிதே
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”
பொருள்: போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலான சிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இந்த அர்ச்சனை ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்குமாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலஹரி மந்திரம்.!!
அகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 100 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.
சதாசிவத்துடன் ஒன்றி நின்று இந்த உலகத்தை வாழ வைத்து வரும் அகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 100 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.
லட்சுமி கடாட்சம் சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழி முறைகளைக் கனவு மூலம் அறிந்து கொள்ளலாம். தேவிக்கு நிவேதனமாகப் பால் பாயாசத்தை படைக்கலாம். இந்தச் சக்கரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் பதித்துப் பூஜை செய்து வீட்டில் பூஜையறையில் சட்டம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றி கிடைக்கும்.
ஒரு தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி வரலாம். நற்பலன்கள் கிட்டும். அதற்கான மந்திரம்.
“தடித்வந்தம் ஸக்த்யா திமிர பரிபந்த்தி-ஸ்புரணயா
ஸ்புரந்-நா நாரத் நாபராண – பரிணத் தேர்த்ர -தனுஷம்.
தவ ஸ்யாமல் மேகம் கம்பி மணிபூரனரக- ஸரணம்
நிஷேவ வர்ஷந்தம் ஹரமிஸிர- தப்தம் த்ரிபுவநம”
இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது காலை வேளையில் வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாகும். அன்னையின் அருள் கிடைப்பதற்கு உதவும் இந்தச் சக்கரமும் மந்திரமும் அனைவராலும் போற்றப்படுகிறது...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴