Monday, 22 June 2020

சண்முகனை துதிப்போம்.!!

1. முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் யான்.

2. உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையும் பின் செல்கேன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் யான்.

3. மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொருள் கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சிமாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி.

4. அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாவென் றோதுவோர் முன்.

5. துய்யதோர் மறைகளாறும் துதித்திடற்கரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூரர் மார்புகண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்கவிப் புவனமெல்லாம்.

6. வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேள் செவ்வெள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூரர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.

7. மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

8. அருவமும் உருவமாகி
அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய்நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் உதித்தனன் உலகம் உய்ய.

9. ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்.

10) குப்பாத வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!

11) சேந்தைனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போதும் மறவாதவர்க்கொரு தாழ்வில்லையே”.

12) “தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே

வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனையான்

ஐவர்க் (கு) இடம்பெறக் காலிரண்டு ஒட்டி அதிலிரண்டு

கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே”.

13) “மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்

சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ

நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே”.

(கந்தர்.அலங்காரம்)

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழிற் கருணை போற்றி
யாவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி
காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேண் மலரடி போற்றி
யன்னான் சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
வெண்பாக்கள் (சில)

விருத்தம் – ராகமாலிகை

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் – இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கல்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்!”

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.”

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரையான் பின்செல்லேன் – பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தி(ல்) வாழ்வே!”

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் ‘அஞ்சல்!’ எனவேல் தோன்றும் – நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் ‘முருகா!’ என்று ஓதுவார் முன்.”

முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியேக் கை தொழுவேன் நான்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment