Wednesday, 1 May 2019

பாவம் தீர்க்குமா காசி யாத்திரை.!!

இந்துக்கள் காலங்காலமாக  காசிக்கு போனால் முக்தி கிடைக்கும் என்பதை ஐதிகமாக கடைப்பிடிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காசியில் தான் ஞானிகளும், யோகிகளும், முனிவர்களும், ரிஷிகளும் ஒன்று சேர்ந்தார்கள். காரணம்  ஆன்மிகத்தின் பிறப்பிடமாக புண்ணிய தலமாக அந்த இடம் இருப்பதாக நம்பினார்கள். இன்றும் நம்புகிறார்கள்.

இந்துக்களாக பிறந்தவர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காசியாத்திரை  சென்றால்தான் பிறவி பயன் பூர்த்தி அடையும் என்று சொல் வார்கள். அதனால் தான் முன்னோர்கள்  வாழ்க்கையில் கடமைகள் அனைத் தையும் முடித்துவிட்டு காசிப்பயணம் மேற்கொண்டார்கள். இந்தப் புனித யாத் திரை பூர்த்தியடைய வேண்டுமானால் இராமேஸ்வரத்தில் தொடங்கி மீண்டும் இராமேஸ்வரத்தில்  முடிய வேண்டும் என்பது கொள்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இதுதான் ஐதிகமும் கூட தோஷமில்லாமல் ஒருவன் வாழ்க்கையை கழிப்பதில்லை. 

ஆனால் பித்ரு  தோஷமானது  அவன் சந்ததியையே நிர்மூலமாக்கிவிடும். அத்தகைய தோஷத் தைக் கொண்டிருப்பவர்கள்  தமது மூன்று தலைமுறைக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்தால் அவர்களது சாபத்திலிருந்து தப்பிக்கலாம். நம் சந்ததியினரும் சந்தோ ஷமாக வாழலாம் என்கிறது கருடபுராணம். இந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சிறந்த தலமாக காசி விளங்குகிறது.  இத்தகைய புண்ணியத்தைத் தருவதால் தான் இது காசி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இம்மாநகரத்தில் இன்றும் சிலபெருமைமிக்க நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல்லிகள் சப்தமிடுவதில்லை, இங்கு மலர்கள் நறுமணமின்றி காணப்படுகிறது, இங்கிருக்கும்  மாடுகள் யாரையும் முட்டுவதில்லை, பிணங்கள் எரியும் போது வாடை வருவதில்லை, காகம் கரைவதில்லை. இன்றும் இது வழிவழியாக தொடர்கிறது.

இத்தகைய புண்ணியத்தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீர்ந்து விடுமா? அப்படியானால் இதுவரை யாத்திரை செய்து வந்தவர்கள் பாவங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டுமே. ஏன் இவர் களது பிரச்னைகள் தீரவில்லை என்ற கேள்விகள் எழலாம். ஆனால் காசிக்கு  போனால் பாவங்களும் தொலையும்,  முக்தியும் கிடைக்கும் என்பது உண்மை தான்.  
காசிக்கு போனால் எதையாவது விட வேண்டுமே என்று  பிடிக்காத பாவக்காயை விட்டுவிட்டால் முக்தி கிடைக்கும் என்ற எண்ணம் சிலருக்குண்டு. பிடித்ததை பற்று வைத்திருக்கும் ஒன்றை விடவேண்டும். இவ்வளவு ஏன்… நான் என்னும்  உங்களைப் பற்றீய நினைவைத்தான் நாம் ஒவ்வொருவரும் அதிகம் கொண் டிருக்கிறோம். அதுதான் என்ன வேண்டும் என்ன பிடிக்கும் என்ன செய்ய வேண் டும் என்பதை தீர்மானிக்கிறது. இதுதான் உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதைத்தான் நீங்கள் விட வேண்டியது. மனதளவில் இறை நம்பிக்கை வைத்து இதை விட்டால் முக்தி என்பது எட்டும்கனி ஆகிவிடும். 

காசி யாத்திரை  உங்கள் உள்வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். சக்தி நிறைந் திருக்கும் இந்த இடங்கள் உங்களுக்குள் மேலும் பல சக்திகளையும்,   ஆன்மிக நிலையையும் கொடுக்கும். இந்த அமைதி நிலை உங்களை பக்குவப்படுத்தும். வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம் அனைத்தையும் சமமாக பாவிக்கும் சக்தியை உங்களுக்குள் உள் நிறுத்தும். ஏனெனில் இறைவன் தன்னுடைய மகத்தான சக் தியை  புண்ணிய நீர் நிலைகளில் பிரதிஷ்டை செய்து மனிதர்களுக்காக அர்ப்ப ணித்து இருக்கிறான்.  
பாவத்தை போக்கிகொள்வதும்,  பாவத்தை நீட்டித்துக்கொள்வதும் அவரவரது குணநலன்களிலேயே தான் இருக்கிறது. காசி யாத்திரை நான் என்பதை தொலைத் தால் முக்தி கிட்டும் யாத்திரைதான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இறுதிகாலத்துக்கு பிறகு வரும் நல்லதும் கெட்டதும் என்ன...?

இன்று எது உன்னுடையதாக இருக்கிறதோ அது நாளை  வேறொரு வருடையதாகிறது.. எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு.”  என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதை மூளை ஏற்றுக்கொள்கிறது. ஆனால்  மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே.. இந்த உலகில் நம்மிடம் இருக்கும் பொருள்களை வேறு உலகம் போகும் போதும் எடுத்து செல்வோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லவேண்டும். அதை உணர்த்தும் கதை இது...

ஒரு ஊரில் செல்வந்தர்  ஒருவர் இருந்தார்.  என்னிடம் இருக்கும்  செல்வத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று பெருமைபட கூறுவார். இவரது பெருமை செவிவழியாக காற்றில் பறந்து அந்த ஊரில் இருந்த துறவி யையும் அடைந்தது.  செல்வந்தருக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணினார். அதற் கான  நேரம் வரும் வரை காத்திருந்தார்.. 

ஒருநாள் செல்வந்தர் வீட்டு வழியாக  துறவி போகும் போது செல்வந்தர், துற வியை வீட்டிற்கு அழைத்தார். துறவியும் புன்னகைத்தப்படி வீட்டினுள் சென்றார். “வாருங்கள் துறவியாரே. நீங்கள்  இங்கு வந்தது நான் செய்த பாக்கியம். தங்க ளுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். நான் செய்வதற்கு கடமைப் பட்டிருக்கி றேன்” என்றான்.
“என்ன கேட்டாலும் செய்வாயா மகனே.. அவ்வளவு செல்வாக்கு பெற்றவனா நீ. இறைவனது திருநாமத்தால் மட்டுமே பெறுவதற்கரிய  பொருளை பெறமுடியும் என்று நினைத்தேன். ஆனால்  நீ சொல்வதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் மனம் குதூகலிக்கிறது” என்றார். செல்வந்தருக்கு பெருமை தாங்கவில்லை. “இருக்காதா பின்னே.. இறைவன் அளவுக்கு பாராட்டிவிட்டாரே. மகிழ்ச்சி துறவியாரே நீங்கள் ஒருவர் தான் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். சரி சொல்லுங்கள் தங்களுக்கு என்ன செய்யவேண்டும்? எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய காத்திருக்கிறேன்” என்றார்.

“எனக்கு எதன் மீதும் ஆசையில்லை மகனே எனக்கு தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் என்று செல்வந்தரைப் பார்த்தார். என்னவேண்டுமானாலும் சொல்லுங் கள்” செய்கிறேன் என்றார். துறவி தன் மடியின் முடிச்சை அவிழ்த்து ஒரு ஊசியை எடுத்தார். “என்ன சொல்லுங்கள் இது போல் தங்க ஊசி வேண்டுமா அல்லது வைர ஊசியா?” என்று கேட்டார் செல்வந்தர்.
“இரண்டுமே வேண்டாம் மகனே இதே ஊசி போதும். ஆனால் இங்கு அல்ல. நாம் இருவரும் இறுதிக்காலம் முடிவடைந்ததும் வேறு ஒரு ஊரில்  நிச்சயம் சந்திப் போம் அப்போது கொடு நான் வாங்கிக்கொள்கிறேன்” என்றார் துறவி. திடுக்கிட்டு நிமிர்ந்தார் செல்வந்தர் “என்ன சொல்கிறீர்கள்? நான் எப்படி இந்த ஊசியை என்னு டன் எடுத்துக்கொண்டுவரமுடியும். நம் உடலையே இந்த உலகில் விட்டு வரும் போது இந்த பொருளைகொண்டுவரவா முடியும்? இது கூட தெரியாமல் இருக்கிறீர் களே” என்றார் செல்வந்தர்.

“என்ன இப்படி சொல்கிறாய் மகனே நீதானே என்னால் எல்லாமே முடியும் என் றாய். நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் மட்டும்தான் இறுதிக்காலத்துக்கு பிற கும் நம்முடன் வரும் அதைப் புரியவைக்கத்தான் இந்த ஊசி நாடகம்” என்றார் துறவி மர்மப்புன்னகையுடன்.  நன்றாகவே புரிய வைத்துவிட்டீர்கள் என்ற செல் வந்தர் செருக்கை தொலைத்து தர்மம் செய்வதில் ஈடுபட்டார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வெற்றியை தருவார் வெயிலுகந்த விநாயகர்.!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி கிராமத்தில் ஊரின் நடுவே எழுந்தருளி அருட்பாலிக்கிறார் முக்குறுணி அரிசி பிள்ளையார்.  ஊரில் உள்ள ஊருணிக்கு செல்லும் சந்து(முக்கு) அருகே மரத்து நிழலில் கோயில் கொண்டமையால் இந்த பிள்ளையார் முக்கூருணி பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். முக்கு+ஊரூணி+பிள்ளையார் என்பதன் சுருக்கமே அது. இக்கோயிலை சுற்றி பல குடியிருப்புகள் இருந்துள்ளது. இவரை முக்குறுணி அரிசி பிள்ளையார் என்றும் அழைப்பார்கள்.  முக்குறுணி அரிசியில் கொழுக்கட்டை செய்து இவருக்கு படைத்தால் வேண்டும் வரம் தருவார் என்று சொல்கிறார்கள். ஆகவேதான் முக்குறுணி அரிசி பிள்ளையார் என்றும் அழைக்கப்பட்டாராம். முகில் வண்ண நாதர் என்ற வீரபாண்டீஸ்வரர் கோயில் வலதுபுறம் முக்குறுணி பிள்ளையார் மிக அம்சமாக இருக்கிறார். பிள்ளையார் சந்நதிக்கு நேராக பின்புறம் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது.பிள்ளையாரின் அருளால் பெருவாழ்வு கிடைக்கப் பெற்றவர்கள் பிள்ளையாருக்கு தனிக்கோயில் கட்ட முன் வந்தனர். 


ஆனால் இந்த பிள்ளையார் எனக்கு கோயிலும் வேண்டாம், கூரையும் வேண்டாம். மரத்து நிழலே போதுமானது என்று கோயில் கட்ட நினைத்த பக்தர்களின் கனவில் தோன்றி அருள் மொழி கூறினார். இருப்பினும் ஒரு சமயம் இவருக்கு கூரை போடமுயற்சி செய்தார் ஒரு பக்தர். அந்த பக்தரை படாத பாடு படுத்தி விட்டார். அன்று முதல் யாரும் இவருக்கு கூரைபோட முன்வரவில்லை. தற்போதும் கூட இவருக்கு  கூரை போட எழுப்பப்பட்ட 4 கல் தூண் அப்படியே  உள்ளது. திறந்த வெளியில், வேப்பமரத்தடியில் ஒய்யாரமாய் இருக்கிறார் பிள்ளையார். இந்த பிள்ளையாருக்கு எண்ணெய் சாத்த வேண்டும் என்றால் குறைந்தது 10 லிட்டர் எண்ணெயாவது  சாத்த வேண்டும். சுமார் 5 அரை அடி உயரத்தில் உள்ள இந்த பிள்ளையார் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளார். இவரது வயிற்றில்  செல்லும் நரம்பு மற்றும் பூணூல் கூட தெரியும் அளவிற்கு மிக அழகாக இந்த பிள்ளையாரின் விக்ரஹம் செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்த பிள்ளையார் மிக பிரமாண்டமாக உள்ளார். அவருக்கு 8 முழம்  வேஷ்டியைதான் கட்ட முடியும். 

இந்த வேஷ்டியை கூட ஒருவரால் கட்ட முடியாது. இரண்டு பேர் தான் சேர்ந்து தான் கட்ட வேண்டும். இந்த மாதிரி பிரமாண்டமான பிள்ளையார் ஒருசில இடங்களில் மட்டுமே இருப்பார். திருச்செந்தூர், சிதம்பரம், திருநெல்வேலி சிவன் கோயில்களில் இதே போல்  பிரமாண்டமான பிள்ளையார் உள்ளார். இந்த பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியில் கொழுக்கட்டை செய்து வைத்து மனம் உருக வேண்டினால் வேண்டும் வரம் தருவார். ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரை திருட்டுத்தனமாக  தூக்கி கொண்டுச்செல்ல  வேண்டும் என்று ஒரு சிலர் முயன்றுள்ளார்கள். இரவு முழுவதும் இவரை  சுற்றி தோண்டினர். அந்த காலத்தில் பாறை கல்களை தூக்கக் கூடிய வீஞ்சி என்று சொல்லப்படும் இயந்திரத்தினை கொண்டு  வந்தனர். அந்த வீஞ்சி மூலம் லாரியில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.  அதற்காக இரவு முழுவதும் முயற்சி செய்தும் அதை தூக்க முடியவில்லை. ஆகவே பொழுது விடிந்தவுடன் பிள்ளையாரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டனர். தற்போது இந்தப் பிள்ளையாரை வணங்க பல இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். நெல்லை - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள முத்தாலங்குறிச்சியில் முக்குறுணி விநாயகர் வீற்றிருக்கிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரதம்.!!

சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அல்லது பாபமோசினி ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஏகாதசிகளில் மேற்கொள்ளும் விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரவல்லது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அல்லது பாபமோசினி ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி முனிவரை காம வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது அவள் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, தனது பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலன்களை அடைந்தாள். 

எனவே தான் இந்த சித்திரை தேய்பிறை ஏகாதசி தினம் பாபமோசினி ஏகாதசி விரதம் என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு வாசமிக்க மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி கற்கண்டுகள் அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து, பெருமாள் லட்சுமி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். 

மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட இனிப்புகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது பாபநாசினி விரதம் மேற்கொள்வதன் பிரதான நோக்கமே நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போக்குவது தான். மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் செய்கிறது இந்த பாபநாசினி ஏகாதசி விரதம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பக்தர்கள் போற்றும் பெரிய மாரியம்மன் கோவில்.!!

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள் சிறப்பு பெற்ற கோவில்களாக உள்ளது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்கள் சிறப்பு பெற்ற கோவில்களாக உள்ளது. பிரப்ரோடு பெரிய மாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில், பெரியார் வீதியில் உள்ள நடு மாரியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் ஒரே நேரத்தில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன. 

இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் கொண்டாடப்படும். குண்டம் இறங்கும் நிகழ்ச்சி காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேரோட்டம் நடு மாரியம்மன் கோவிலிலும் நடைபெறும். பிரப் ரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவிழா முக்கியமானதாகும். 

கம்பம் நடப்பட்ட நேரம் முதல் கம்பம் பிடுங்கும்வரை 15 நாட்கள் இடைவெளி இன்றி பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். கொங்கு மண்டலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து இரவு பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்து இருந்து கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். அதுபோல் பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, ஈரோடு மாநகரையே குலுங்கச்செய்யும் அளவுக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பாவங்கள் போக்கும் பவானி சங்கமேஸ்வரர்.!!

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.

காவிரியும், பவானியும் கண்ணுக்கு தெரியாத அமுத நதியும் கூடும் பவானி கூடுதுறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை சங்கமேஸ்வரர் என்றும், தேவியை வேதநாயகி என்றும் அழைக்கிறார்கள். 2 ஆறுகளுக்கிடையே தீபகற்பமாக இருக்கும் பவானி நகரம்தான் ஈரோடு மாவட்டத்திலேயே மிகப்பழமையான நகரம் ஆகும். ஆங்கிலேய காலத்தில் ஈரோடு மாவட்டப்பகுதிகளை நிர்வாகம் செய்த ஆங்கிலேயே கலெக்டர்கள் பவானியிலேயே தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருந்த மாளிகைகள் இன்றும் பவானி கோவில் அருகே உள்ளன.

அதுபோல் முதன்முதலாக போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டதும் பவானியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பவானியில் உற்பத்தி செய்யப்படும் பவானி ஜமுக்காளம் உலகத்தரம் வாய்ந்தது. இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் ஜமுக்காளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.

சங்கமேஸ்வரர் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல்லவர் கால சிற்பங்களும், பாண்டியர் தொடர்பான குறிப்புகள், சோழர் கால பட்டயங்களும் உள்ளன. கோவில் திருப்பணிகள் நடைபெற்றதால் பல கல்வெட்டுகள் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவில் வசந்த மண்டபத்தின் நடுவில் தாமரை மலர் சிற்பம் உள்ளது. அதனை சுற்றி பெண்கள் நாட்டியம் ஆடும் காட்சியும், சிவபெருமான் தாண்டவ கோலத்தில் காளியுடன் நடனம் ஆடும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளன. அதுபோல் பிரம்மன், திருமால், முருகன் தும்புரு ஆகியோர் இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்ற காட்சிகளும் உள்ளன.

தூண்களில் சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இங்கு அம்மன் ஆராட்டு கட்டில் 1804-ம் ஆண்டு கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் கேரோ வழங்கியதாகும்.

பழமை குன்றாமல் புதுப்பொலிவு பெற்றுவரும் பவானி நகரில் செல்லியாண்டி அம்மன் உள்பட பல்வேறு சிறப்பு பெற்ற வேறு கோவில்களும் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

விருப்பங்களை நிறைவேற்றும் கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்.!!

கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும்.

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம் 
ப்ருந்தார கைர்வந்திதாம் 
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம் 

மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம் 
போகாபவர் கப்ரதாம் 
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம் 
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் காலை மற்றும் மாலையில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வருவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, அம்பிகையின் படத்திற்கு முன் தீபம் ஏற்றி, இந்த மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சமூக அந்தஸ்து தரும் சச யோகம்.!!

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் என்பது, அனைவரையும் தனது பார்வை பலத்தால் கட்டுப்படுத்தி வைக்கும் அசுப கிரகமான சனியால் ஏற்படும் சுப யோகம் ஆகும். 

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. அந்த நிலையில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.

சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள். 

மத்திய அளவில் உயரம், கருப்பான நிறம் கொண்ட இவர்களுக்கு 70 வயதுக்கு மேல் ஆயுள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. கடும் உழைப்பினால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள். இந்த யோகம் கொண்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும், தன்னை நம்பியவர்களுக்காக உண்மையுடன் செயல்படும் துணிச்சல் கொண்டவர்கள் ஆவர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Tuesday, 30 April 2019

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய விரத வழிபாடு.!!

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் சில விரத வழிபாடுகளை முறையாக செய்து வந்தால் அதன் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡