Wednesday, 1 May 2019

பாவம் தீர்க்குமா காசி யாத்திரை.!!

இந்துக்கள் காலங்காலமாக  காசிக்கு போனால் முக்தி கிடைக்கும் என்பதை ஐதிகமாக கடைப்பிடிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காசியில் தான் ஞானிகளும், யோகிகளும், முனிவர்களும், ரிஷிகளும் ஒன்று சேர்ந்தார்கள். காரணம்  ஆன்மிகத்தின் பிறப்பிடமாக புண்ணிய தலமாக அந்த இடம் இருப்பதாக நம்பினார்கள். இன்றும் நம்புகிறார்கள்.

இந்துக்களாக பிறந்தவர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காசியாத்திரை  சென்றால்தான் பிறவி பயன் பூர்த்தி அடையும் என்று சொல் வார்கள். அதனால் தான் முன்னோர்கள்  வாழ்க்கையில் கடமைகள் அனைத் தையும் முடித்துவிட்டு காசிப்பயணம் மேற்கொண்டார்கள். இந்தப் புனித யாத் திரை பூர்த்தியடைய வேண்டுமானால் இராமேஸ்வரத்தில் தொடங்கி மீண்டும் இராமேஸ்வரத்தில்  முடிய வேண்டும் என்பது கொள்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. இதுதான் ஐதிகமும் கூட தோஷமில்லாமல் ஒருவன் வாழ்க்கையை கழிப்பதில்லை. 

ஆனால் பித்ரு  தோஷமானது  அவன் சந்ததியையே நிர்மூலமாக்கிவிடும். அத்தகைய தோஷத் தைக் கொண்டிருப்பவர்கள்  தமது மூன்று தலைமுறைக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்தால் அவர்களது சாபத்திலிருந்து தப்பிக்கலாம். நம் சந்ததியினரும் சந்தோ ஷமாக வாழலாம் என்கிறது கருடபுராணம். இந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சிறந்த தலமாக காசி விளங்குகிறது.  இத்தகைய புண்ணியத்தைத் தருவதால் தான் இது காசி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இம்மாநகரத்தில் இன்றும் சிலபெருமைமிக்க நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல்லிகள் சப்தமிடுவதில்லை, இங்கு மலர்கள் நறுமணமின்றி காணப்படுகிறது, இங்கிருக்கும்  மாடுகள் யாரையும் முட்டுவதில்லை, பிணங்கள் எரியும் போது வாடை வருவதில்லை, காகம் கரைவதில்லை. இன்றும் இது வழிவழியாக தொடர்கிறது.

இத்தகைய புண்ணியத்தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீர்ந்து விடுமா? அப்படியானால் இதுவரை யாத்திரை செய்து வந்தவர்கள் பாவங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டிருக்க வேண்டுமே. ஏன் இவர் களது பிரச்னைகள் தீரவில்லை என்ற கேள்விகள் எழலாம். ஆனால் காசிக்கு  போனால் பாவங்களும் தொலையும்,  முக்தியும் கிடைக்கும் என்பது உண்மை தான்.  
காசிக்கு போனால் எதையாவது விட வேண்டுமே என்று  பிடிக்காத பாவக்காயை விட்டுவிட்டால் முக்தி கிடைக்கும் என்ற எண்ணம் சிலருக்குண்டு. பிடித்ததை பற்று வைத்திருக்கும் ஒன்றை விடவேண்டும். இவ்வளவு ஏன்… நான் என்னும்  உங்களைப் பற்றீய நினைவைத்தான் நாம் ஒவ்வொருவரும் அதிகம் கொண் டிருக்கிறோம். அதுதான் என்ன வேண்டும் என்ன பிடிக்கும் என்ன செய்ய வேண் டும் என்பதை தீர்மானிக்கிறது. இதுதான் உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதைத்தான் நீங்கள் விட வேண்டியது. மனதளவில் இறை நம்பிக்கை வைத்து இதை விட்டால் முக்தி என்பது எட்டும்கனி ஆகிவிடும். 

காசி யாத்திரை  உங்கள் உள்வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். சக்தி நிறைந் திருக்கும் இந்த இடங்கள் உங்களுக்குள் மேலும் பல சக்திகளையும்,   ஆன்மிக நிலையையும் கொடுக்கும். இந்த அமைதி நிலை உங்களை பக்குவப்படுத்தும். வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம் அனைத்தையும் சமமாக பாவிக்கும் சக்தியை உங்களுக்குள் உள் நிறுத்தும். ஏனெனில் இறைவன் தன்னுடைய மகத்தான சக் தியை  புண்ணிய நீர் நிலைகளில் பிரதிஷ்டை செய்து மனிதர்களுக்காக அர்ப்ப ணித்து இருக்கிறான்.  
பாவத்தை போக்கிகொள்வதும்,  பாவத்தை நீட்டித்துக்கொள்வதும் அவரவரது குணநலன்களிலேயே தான் இருக்கிறது. காசி யாத்திரை நான் என்பதை தொலைத் தால் முக்தி கிட்டும் யாத்திரைதான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment