Sunday, 1 July 2018

மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்த திருக்காமேஸ்வரர்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூரில் ஐஸ்வர்ய மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்த சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு:

தட்சன், ஈசனை விடத் தானே உயர்ந்தவன் என்கிற செருக்கு கொண்டு பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான்.  தட்சனின் மகளான தாட்சாயினியின் துணைவர் சிவபெருமானுக்கு இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. ஆனாலும், பாசம் விரட்டியதால் தந்தை நடத்தும் யாகத்தில் அழைப்பு இல்லாமலே சென்ற தாட்சாயினி அவமானப்பட்டுத் திரும்பினாள். இதனால் தந்தைக்கு சாபமும் கொடுத்து விட்டு வந்தாள். தன் அனுமதி இல்லாமல் சென்றதால், தாட்சாயினியை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் ஈசன். தவறை உணர்ந்த தேவி, மீண்டும் ஈசனுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள். பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து என்னை வழிபடு. உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி என்ற பெயர் பூண்டு பர்வதமலையில் தவம் புரியலானாள்.

இறைவன், இறைவியை சேர்த்து வைக்க  பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். சின்முத்திரை காட்டி யோக நிலையில் இருக்கும் ஈசனுக்கு சக்தியின் நினைவு வர வைக்க, அனைவரும் மன்மதனை அணுகினர். ஆனால், மன்மதன் சம்மதிக்கவில்லை. காம பாணத்தை எனக்கு அருளியவரே எம்பெருமான்தான். இதை அவர் மேல் நான் எய்வது எனக்கு நானே அழிவைத் தேடிக் கொள்ளும் முடிவாகும் என்று மறுத்தான். தேவலோகமே ஒன்று திரண்டு சாபம் விட்டது மன்மதனுக்கு. அதன் பின் வேறு வழியின்றி, பல மைல் தொலைவில் உள்ள ஒரு புன்னை மரத்தடியில் ஒளிந்து கொண்டு ஈசனைக் குறி பார்த்து காம பாணம் எய்யத் தயாரானான்.

நடந்ததையும், நடக்கப் போவதையும் அறிந்த ஈசன் வில்லில் இருந்து பாணம் வெளிப்பட்ட நேரத்திலேயே நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். இதன் விளைவு, பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. சிவனை அடைவதற்கான காம பாணம் தன் மேல் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் கூடினாள். எனவேதான் இங்குள்ள ஈசன் திருக்காமேஸ்வரராகவும், அம்பாள் சிவகாம சுந்தரியாகவும் காட்சி தருகிறார்கள். இந்த நிகழ்வை சித்திரிக்கும் படைப்பு  சிற்பம் இக்கோயிலில் உள்ளது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன்மதனின் சிலையும் உள்ளது.

மகாலட்சுமியே சிவனை பிரதிஷ்டை செய்த தலம்:

இத்தல சிவனை மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்டிருப்பது சிறப்பு. வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக திருமாலானவர் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோஹித்ததால் ஐயப்பன் அவதரித்தார். இந்த நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுந்தத்தை விட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்குக் காரணமான சிவனிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால், ஈசன் அங்கே வராததால் மகாலட்சுமி வெள்ளூருக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்தார்.

இப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன் பின் ஈசன் அவள் முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். வேறெங்கும் காணாத தட்சிண பாகம் என்று சொல்லக் கூடிய வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய ஸ்தானத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும் இங்கே தரிசிக்கலாம்.சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெல்லூர் எனப் பெயர் பெற்றது. 

நாளடைவில் வெள்ளூராக திரிந்தது. இங்குள்ள மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச்சக்கரம் உள்ளது. ஆலயத்தின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். சித்தர்களுக்கே எங்கு சென்றும் சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால் நாம் நினைக்கும் காரியம் சித்தியாக திருக்காமேஸ்வரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்பாகும்.தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலாளர்கள்  இங்கு வந்தால் தோஷம் அகலும். சுக்கிரதோஷம் நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலட்சுமியை சுக்ர ஹோரையில் இங்கு வந்து ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.  இழந்த தன் கணவனை ரதிதேவி திரும்பப் பெற்ற திருத்தலம் என்பதால் தம்பதியர் இங்கே வந்து வணங்கினால் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம், திருமணத் தடை, ஐஸ்வர்ய யோகம், பிரிந்த தம்பதியர் இணைவதற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிள்ளை வரம் தரும் தென்கரை மகாராஜேஸ்வரர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது சித்தூர் அருள்மிகு தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோயில். தமிழகத்தில் அமைந்திருந்தாலும் இக்கோயில்  கேரளாவில் உள்ள கோயில்களின் கட்டிட கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவருக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் முறைப்படி அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. மலையாள நாட்டில் உள்ளவர்கள் இங்கு பிள்ளை வரம் வேண்டி வழிபட்டு குழந்தைவரம் பெற்றனர். இக்கோயிலின் அற்புதங்கள் குறித்த வரலாற்று நிகழ்வுகள் பல உள்ளன. சித்தூர் சென்றால் அதிக பொன் பொருட்கள் கிடைக்கும் என முதியவர் ஒருவர் கூறியதை கேள்விப்பட்டு கொள்ளையடிக்கும் தொழில் செய்தவர்கள் சிலர் சித்தூர் சென்று பொருட்களை கொள்ளையடித்தனர்.

இதனை அன்று இரவே ஊர் பெரியவர்களின் கனவில் சுவாமி தோன்றி தெரிவித்தார். மறுநாள் கொள்ளையடித்தவர்கள் இறைவனுடன் சேர்ந்துவிட்டதாக  செவிவழி செய்திகள் உள்ளன. குழந்தை வரம் வேண்டி பெண் ஒருவர் மகாராஜாவிற்கு காணிக்கையாக 108 பொன் எடுத்து முடிப்பதாகக் கட்டி பேச்சியம்மன் கோயிலில் முறையாக அரும் தவமிருந்து பூஜை செய்தார். அதன் பலனாக அவருக்கு ஏழு குழந்தைகளை கொடுத்ததுடன் வாழ்வில் ஏற்றம் பெறவும் செய்தார் சித்தூர் மகாராஜா. இன்றும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வன்புலி வாகனனாக, வந்தவரைக் காப்பவனாக இருந்து அருள்பாலிக்கிறார் சித்தூர் மகாராஜா. இங்குள்ள தளவாய் சுவாமிக்கு சமைக்காத பச்சை பொருட்கள் நிவேதனமாக படைக்கப்படுகின்றன.

நித்தியபடி நடக்கும் அபிஷேகம் ஆராதனைகளை பக்தர்கள் பார்வையிட அனுமதி இல்லை. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பங்குனி பெருந்திருவிழாவில் 6ம் திருநாள் மட்டும் கற்பூற ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூர் சென்று அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரப்பாடி வழியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்றால் நம்பியாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. ரயில்களில் செல்பவர்கள் வள்ளியூரில் இருந்து செல்லமுடியும். வள்ளியூரில் பக்தர்களுக்கு தங்குவதற்கு தனியார் விடுதி வசதிகள் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பலன் தரும் ஸ்லோகம்

(அனைத்து விருப்பங்களும் நிறைவேற...
காம் ச த்ருஷ்ட்வா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபா வஸுந்தரா
ஸர்வகாமதுகே தேவி ஸர்வதீர்த்தாபிஷேசினீ
பாவனே ஸுரபிஸ்ரேஷ்டே தேவிதுப்யம் நமோஸ்துதே
கோமாதா ஸ்லோகம்

பொதுப் பொருள்:

தெய்வப் பிறவியான பசுவை வணங்கி, அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டுகிறது. நற்குணங்கள் நிரம்பிய, அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். இந்த வழிபாடு அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மைப் பரிசுத்தம் செய்யக்கூடியவள் இந்த கோமாதா. கேட்டதையெல்லாம் தரும் காமதேனுவாகிய கோமாதாவே தங்களை வணங்குகிறேன்.

பசுவை தேவர்கள், எல்லை தெய்வங்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் போன்றோர் அனுதினமும் பூஜிப்பதாகக் கூறப்படுகிறது. கோமாதாவாகிய பசுவை வெள்ளிக்கிழமைகளில் பூஜித்து இத்துதியை சொல்லி வர தீராத நோய்களும் தீரும். சகல பாவங்களும் சட்டென விலகும் என வேதங்கள் கூறுகின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

புண்ணியம் தரும் காவிரி நீராடல்

கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம்.

கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் கங்கையை விட காவிரியில் நீராடுவது பன்மடங்கு புண்ணியத்தை நமக்கு கிடைக்கச் செய்யும் என்பது எவ்வளவு சிறப்பான விஷயம். 

கங்கையை விட உயர்ந்தது 

இந்த காவிரியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், ‘கங்கையிற் புனிதமாய காவிரி’ என்று புகழப்பட்டுள்ளது. புண்ணியம் சேர்க்கும் காவிரியின் புனித நீராடலுக்கு, மாதங்களிலேயே சிறப்பு மிகுந்த ஒன்றாக பார்க்கப்படும் ஐப்பசி மாதம்தான் உகந்தது. இந்த மாதத்தில் மயிலாடுதுறையில் ஓடும் காவிரி படித்துறையில் மூழ்கி எழுந்தால், ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் ஒரே நாளில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரியின் மகிமையை பற்றி அரிச்சந்திர மன்னனுக்கு, அகத்திய முனிவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுபற்றி ஸ்ரீதுலா புராணம் தெளிவாக கூறுகிறது. அகத்திய முனிவர் காவிரியின் சிறப்பு குறித்து கூறியபோது, அதனை அங்கிருந்த பல முனிவர்கள் கேட்டுணர்ந்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண முனிவர்கள் கிடையாது. தவத்தில் சிறந்து விளங்கிய மகா தபஸ்விகள். அந்த மகா தவவான்களின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். 

மகா தபஸ்விகள் 

வசிஷ்டர், பிருகு, காச்யபர், வாமதேவர், வீதிஹோத்ரர், துர்வாசர், ஜாபாமலி, வாமதேவர், மங்கணர், காலவர், அத்ரி, விசுவாமித்திரர், கண்வர், யாஜர், மார்க்கண்டேயர், அஸிதா, பரத்வாஜர், கவுதமர், உபயாஜர், பராசரர், பைலவர், சாதாதபர், வியாசர், மவுத்கலர், முக்தர், வால்மீகி, கவஷர், ஜாதுகர்ணர், சுதீஷணர், சதானந்தர், சத்யவிரதர், மதங்கர், ஸத்யதபஸ், நாரதர், காந்தர், மாண்டவ்யர், ஆஸூரி, தவும்யர், கவிமதுஹாச்ரயர், ஹோதா, தூமகேது, ஜலப்லவர், சங்கர், லிகிதர், போதாயனர், யக்ஞகேது, யாக்ஞவல்கியர், மருக்ரது, புலஸ்தியர், புலஹர், கவுரர், ஆச்வலாயனர், ஆபஸ்தம்பர், மரீசி, யக்ஞராசி, பப்ரு. 

இத்தனை ரிஷி முனிவர்களும் அறியும்படியாக, காவிரியை பற்றி அகத்திய முனிவர் கூறியதை நாமும் தெரிந்து கொள்ளலாம். 

புண்ணிய நதிகளின் சங்கமம் 

ஐப்பசி மாதத்தில், புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரியில் கலக்கின்றன. எனவே அந்த மாதத்தில் காவிரியில் நீராடினால், புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடிய யோக பலன் கிடைக்கும். முக்தி பேறும் கிட்டும். அதுமட்டுமின்றி ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுபவரையும் சேர்த்து அவரது தாயார் வழியில் ஏழு தலைமுறையினரும், தந்தை வழியில் ஏழு தலைமுறையினரும் வைகுண்டப் பதவியை அடைவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

நீராடும் போது இரண்டு கைகளும் நிரம்ப பூக்களை எடுத்து காவிரிக்கு சமர்ப்பணம் செய்து பூலோக வைகுண்டத்தில் வாசம் செய்து வரும் ரங்கநாதரை நினைத்து வழிபட வேண்டும். ஐப்பசி மாதம் அனைத்து நாட்களும் காவிரியில் நீராடுவதாக ஒருவர் நினைத்துக்கொண்டால், சில காரியங்களை நிறைவேற்றவேண்டியது முக்கியம். 

கடைபிடிக்க வேண்டியவை 

எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கூடாது. பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. முகச்சவரம் மற்றும் முடிவெட்டிக்கொள்ளுதல் கூடாது. தாம்பூலம் போட்டுக்கொள்வது, வீண் பேச்சு, பாய், கட்டில்களில் படுப்பது, சாப்பிட கூடாதவற்றைச் சாப்பிடுவது, வெளியிலோ அல்லது ஓட்டலிலோ சாப்பிடுவது, ஆண்–பெண் சங்கமம், தானம் வழங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

இதே போல் உணவில் பூசணிக்காய், மொச்சைக்கொட்டை, கேழ்வரகு, தினை, உளுந்து, துவரை, கத்தரிக்காய், கொள்ளு, முருங்கைக்காய், சிறுகீரை, சுரைக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரவு உணவு, காலை சந்தி– மாலை சந்தியில் உணவு உட்கொள்ளக் கூடாது. பழைய சாதம், எருமைப்பால் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. 

கடைபிடிக்க வேண்டியவைகளை படித்து விட்டு அயர்ந்து போய்விட வேண்டாம். தங்களால் இயன்றவரை கடைபிடித்தால் கூட புண்ணியம் கிடைக்கும். 

முடவன் முழுக்கு 

ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நீராடினாலும், நீராடாவிட்டாலும், கார்த்திகை முதல் நாள் அன்றும், அதற்கு முந்தைய நாளான ஐப்பசி மாத கடைசி தினத்திலும் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள். ஐப்பசி மாத கடைசி தினத்தில் நடைபெறும் புனித நீராட்டம் ‘கடை முழுக்கு’ என்றும், கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. 

‘ஐப்பசி மாதம் முடிந்து விட்டதே!, என்னால் புண்ணிய பலன்களை அடைய முடியாமல் போய்விட்டதே!’ என்று கூறி வருத்தப்பட்டான் ஒரு முடவன். அந்த வருத்தத்தை மயூரநாதரிடம் முறையீடாகவும் வைத்தான். அவனது வருத்தமான புலம்பலைக் கேட்ட ஈசன், அசரீரியாக தோன்றி, ‘நீ சென்று காவிரியில் மூழ்கி எழு, உனக்கும் முக்தி பேறு கிடைக்கும்’ என்று கூறினார். அதன்படியே முடவனும் கார்த்திகை முதல்நாள் அன்று காவிரியில் புனித நீராடி, முக்தி பேற்றை அடைந்தான். ‘முடவன் முழுக்கு’ நடைபெறுவதற்கு காரணமாக இந்தக் கதை கூறப்படுகிறது. 

இடப தீர்த்த சிறப்பு 

ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோவிலில் முன்பு உள்ள காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஏனெனில் இந்தப் பகுதியில் ஓடும் காவிரியே, இந்தத் தலத்திற்கு மிகப்பெரிய பெருமையை சேர்க்கும் தீர்த்தமாக அமையப்பெற்றிருப்பதுதான். இங்குள்ள காவிரி ஆற்று படித்துறை பகுதிக்கு இடப (நந்தி) தீர்த்தம் என்று பெயர். 

எவர் ஒருவரும் கயிலை மலையானை தரிசனம் செய்ய செல்லும் முன்பு வாயிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரிடம் அனுமதி பெற்ற பிறகே உள்ளே செல்ல முடியும். அத்தகைய சிறப்பு வாய்ந்தவர் நந்தி பகவான். ஒருமுறை நந்திதேவருக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது. அவரது வாக்கினில் ஆணவம் குடிகொள்ளத் தொடங்கியது. 

இதனால் நந்தி பகவானை, பாதாளத்தில் அழுத்தி தள்ளினார் சிவபெருமான். அப்படி அழுத்தி தள்ளிய இடம்தான் மயிலாடுதுறை காவிரியின் துலாக் கட்டம். இந்த இடத்தின் நடுவில் இன்றும் இறைவனின் திருவுருவை கண்டு பரவசம் அடையலாம். இடப தேவர் அழுந்தப்பட்ட இடம் என்பதால் அந்த தீர்த்தம் இடப தீர்த்தம் என்று பெயர் பெற்றது. 

சிவபெருமானால் பாதாளத்தில் அழுந்தப்பட்டதும், நந்தி தேவர் உண்மையை உணர்ந்தார். பின்னர் சிவஞானத்தை உபதேசம் செய்யும்படி சிவபெருமானை விரும்பி கேட்டுக்கொண்டார். சிவனும் அவ்வாறே நந்திதேவருக்கு சிவஞானத்தை உபதேசம் செய்து அருளினார். இது ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று, காவிரியின் வட பகுதியில் உள்ள வள்ளலார் கோவில் என்னும் இடத்தில் நடந்தது. இதனால் தான் காவிரியில் ஐப்பசி அமாவாசையன்று நீராடி வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக மாறியது. 

ஐப்பசி அமாவாசையில் நடுப்பகல் வேளையில் இடப தீர்த்த துறையில் இருந்து காவிரி தீர்த்தத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், அந்த தீர்த்தம் எத்தனை ஆண்டுகள் ஆயினும், கெட்டுப்போகாது என்பது இன்றும் அனைவராலும் நம்பப்படும் ஐதீகம். இன்றும் பலர் மேலே சொன்ன நேரத்தில் தீர்த்தத்தை பிடிப்பது நடைபெற்று வருகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர்.!! மலை நம்பி கோவில்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குறுங்குடி அழகிய நம்பிராயன்கோயில். வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இக்கோயில் குறித்த குறிப்புகள் உள்ளன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்த சிறிய குடிகை என்று பொருள்படும் இடம் என்பதால் குறுங்குடி என பெயர்பெற்றது. வராஹ அவதாரத்தில் மிகப்பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்று மற்றொரு பெயர் காரணமும் கூறப்படுகிறது. நம்பாடுவான் என்ற பாணர் குலத்தை சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்துள்ள மகேந்திரகிரி மலையில் வாழ்ந்துவந்தார், அவர் யாழ் வித்தகர். கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருக்குறுங்குடியில் இறைவனை தரிசிக்கவந்தார். வழியில் பசியோடு இருந்த பிரம்ம ராட்சஷன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக்கொண்டு அவரை புசிக்கப்போவதாக கூறினான்.

உடனே நம்பாடுவான் அவரிடம், நம்பியாண்டவரை தரிசித்துவிட்டு வந்து உனக்கு இறையாகிறேன் என கூறிவிட்டு கோயிலுக்கு சென்றார். அங்கு நம்பியாண்டவரை தரிசிக்க முயன்றபோது கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆனாலும் பக்த சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்டியபோது நம்பியாண்டவரும் கொடிமரத்தை நகர செய்கிறார். இதனால் மெய்மறந்து நம்பாடுவான் திருவாய்மொழி பாசுரத்தை கைசிக இசையில் அமைத்து பாடினார். நம்பியை தரிசித்த மகிழ்ச்சியுடன் நம்பாடுவான், பிரம்ம ராட்சஷனுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டை நோக்கி  நடந்தார். அப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன் நம்பாடுவானை தடுத்து நிறுத்தி அந்த காட்டில் ஒரு பிரம்ம ராட்சஷன் வாழ்வதாகவும் அந்தவழியாக செல்பவர்களை அவன் இறையாக்கி கொள்வதாகவும் கூறினார். உடனே நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு தான் கொடுத்த வாக்குறுதியை கூறி அதை நிறைவேற்றவே தான் அந்த காட்டுக்குள் செல்வதாக கூறினார். 

வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடவில்லை. ராட்சஷனை தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சஷனைக் கண்டு தான் நம்பியை தரிசித்து விரதம் முடித்து விட்டதாகவும் இப்போது தன்னை இறையாக்கலாம் எனவும் கூறினார். ஆனால் பிரம்ம ராட்சஷன்  தன்னுடைய பசி அடங்கிவிட்டதாகக் கூறி நம்பாடுவானை இறையாக்கி உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியை பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம ராட்சஷனுக்கு கொடுக்க அதை உண்ட பிரம்ம ராட்சஷன், சாபத்தால் தான் பெற்ற ராட்சஷ வடிவில் இருந்து விமோசனம் பெற்று தன் முற்பிறவி வடிவமான பிராமண வடிவத்தை பெற்றதாக இத்தலத்தின் சிறப்புகள் குறித்த வரலாறு கூறுகிறது. இலக்கிய சிறப்புகள் பெற்றுள்ள இத்தலம் இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. திருவாலி திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனை பாடி பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்துதான் முக்தியடைந்தார்.

மன்னர் ஒருவன் தரிசனம் செய்யவந்தபோது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால் ஸ்ரீதெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும் என்ற அசரீரி கூறியதை கேட்டு அந்த இடத்தை தோண்டினார். அப்போது அங்கு அந்த சிலைகள் கிடைத்தன. அவற்றை நாங்குநேரி வானமாமலை திருக்கோயிலில் அந்த மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்திகள் உள்ளன. இக்கோயிலில் தினமும் 6 கால பூசைகள் நடக்கின்றன. பங்குனி பிரமோற்சவம், கார்த்திகை கைசிக ஏகாதசி விழா சிறப்புகள் ஆகும். நெல்லையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் நாங்குநேரி அருகே கோயில் அமைந்துள்ளது. நம்பி வருவோருக்கு அழகிய நம்பிராயர் நல்லதே செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.நெல்லை, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு ெசல்ல பஸ் வசதிகள் உள்ளன. ராமானுஜ கூடம் என்ற தங்கும் விடுதி உள்ளது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் 54வது திவ்ய தேசமாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡