Sunday, 1 July 2018

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர்.!! மலை நம்பி கோவில்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குறுங்குடி அழகிய நம்பிராயன்கோயில். வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இக்கோயில் குறித்த குறிப்புகள் உள்ளன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்த சிறிய குடிகை என்று பொருள்படும் இடம் என்பதால் குறுங்குடி என பெயர்பெற்றது. வராஹ அவதாரத்தில் மிகப்பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்று மற்றொரு பெயர் காரணமும் கூறப்படுகிறது. நம்பாடுவான் என்ற பாணர் குலத்தை சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்துள்ள மகேந்திரகிரி மலையில் வாழ்ந்துவந்தார், அவர் யாழ் வித்தகர். கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து திருக்குறுங்குடியில் இறைவனை தரிசிக்கவந்தார். வழியில் பசியோடு இருந்த பிரம்ம ராட்சஷன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக்கொண்டு அவரை புசிக்கப்போவதாக கூறினான்.

உடனே நம்பாடுவான் அவரிடம், நம்பியாண்டவரை தரிசித்துவிட்டு வந்து உனக்கு இறையாகிறேன் என கூறிவிட்டு கோயிலுக்கு சென்றார். அங்கு நம்பியாண்டவரை தரிசிக்க முயன்றபோது கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆனாலும் பக்த சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்டியபோது நம்பியாண்டவரும் கொடிமரத்தை நகர செய்கிறார். இதனால் மெய்மறந்து நம்பாடுவான் திருவாய்மொழி பாசுரத்தை கைசிக இசையில் அமைத்து பாடினார். நம்பியை தரிசித்த மகிழ்ச்சியுடன் நம்பாடுவான், பிரம்ம ராட்சஷனுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டை நோக்கி  நடந்தார். அப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன் நம்பாடுவானை தடுத்து நிறுத்தி அந்த காட்டில் ஒரு பிரம்ம ராட்சஷன் வாழ்வதாகவும் அந்தவழியாக செல்பவர்களை அவன் இறையாக்கி கொள்வதாகவும் கூறினார். உடனே நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு தான் கொடுத்த வாக்குறுதியை கூறி அதை நிறைவேற்றவே தான் அந்த காட்டுக்குள் செல்வதாக கூறினார். 

வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடவில்லை. ராட்சஷனை தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் ராட்சஷனைக் கண்டு தான் நம்பியை தரிசித்து விரதம் முடித்து விட்டதாகவும் இப்போது தன்னை இறையாக்கலாம் எனவும் கூறினார். ஆனால் பிரம்ம ராட்சஷன்  தன்னுடைய பசி அடங்கிவிட்டதாகக் கூறி நம்பாடுவானை இறையாக்கி உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியை பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம ராட்சஷனுக்கு கொடுக்க அதை உண்ட பிரம்ம ராட்சஷன், சாபத்தால் தான் பெற்ற ராட்சஷ வடிவில் இருந்து விமோசனம் பெற்று தன் முற்பிறவி வடிவமான பிராமண வடிவத்தை பெற்றதாக இத்தலத்தின் சிறப்புகள் குறித்த வரலாறு கூறுகிறது. இலக்கிய சிறப்புகள் பெற்றுள்ள இத்தலம் இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. திருவாலி திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்று பரந்தாமனை பாடி பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்துதான் முக்தியடைந்தார்.

மன்னர் ஒருவன் தரிசனம் செய்யவந்தபோது கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால் ஸ்ரீதெய்வநாயகன் மற்றும் ஸ்ரீ வரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும் என்ற அசரீரி கூறியதை கேட்டு அந்த இடத்தை தோண்டினார். அப்போது அங்கு அந்த சிலைகள் கிடைத்தன. அவற்றை நாங்குநேரி வானமாமலை திருக்கோயிலில் அந்த மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்திகள் உள்ளன. இக்கோயிலில் தினமும் 6 கால பூசைகள் நடக்கின்றன. பங்குனி பிரமோற்சவம், கார்த்திகை கைசிக ஏகாதசி விழா சிறப்புகள் ஆகும். நெல்லையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் நாங்குநேரி அருகே கோயில் அமைந்துள்ளது. நம்பி வருவோருக்கு அழகிய நம்பிராயர் நல்லதே செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.நெல்லை, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு ெசல்ல பஸ் வசதிகள் உள்ளன. ராமானுஜ கூடம் என்ற தங்கும் விடுதி உள்ளது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் 54வது திவ்ய தேசமாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment