Sunday, 1 July 2018

பிள்ளை வரம் தரும் தென்கரை மகாராஜேஸ்வரர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது சித்தூர் அருள்மிகு தென்கரை மகாராஜேஸ்வரர் திருக்கோயில். தமிழகத்தில் அமைந்திருந்தாலும் இக்கோயில்  கேரளாவில் உள்ள கோயில்களின் கட்டிட கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவருக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் முறைப்படி அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. மலையாள நாட்டில் உள்ளவர்கள் இங்கு பிள்ளை வரம் வேண்டி வழிபட்டு குழந்தைவரம் பெற்றனர். இக்கோயிலின் அற்புதங்கள் குறித்த வரலாற்று நிகழ்வுகள் பல உள்ளன. சித்தூர் சென்றால் அதிக பொன் பொருட்கள் கிடைக்கும் என முதியவர் ஒருவர் கூறியதை கேள்விப்பட்டு கொள்ளையடிக்கும் தொழில் செய்தவர்கள் சிலர் சித்தூர் சென்று பொருட்களை கொள்ளையடித்தனர்.

இதனை அன்று இரவே ஊர் பெரியவர்களின் கனவில் சுவாமி தோன்றி தெரிவித்தார். மறுநாள் கொள்ளையடித்தவர்கள் இறைவனுடன் சேர்ந்துவிட்டதாக  செவிவழி செய்திகள் உள்ளன. குழந்தை வரம் வேண்டி பெண் ஒருவர் மகாராஜாவிற்கு காணிக்கையாக 108 பொன் எடுத்து முடிப்பதாகக் கட்டி பேச்சியம்மன் கோயிலில் முறையாக அரும் தவமிருந்து பூஜை செய்தார். அதன் பலனாக அவருக்கு ஏழு குழந்தைகளை கொடுத்ததுடன் வாழ்வில் ஏற்றம் பெறவும் செய்தார் சித்தூர் மகாராஜா. இன்றும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வன்புலி வாகனனாக, வந்தவரைக் காப்பவனாக இருந்து அருள்பாலிக்கிறார் சித்தூர் மகாராஜா. இங்குள்ள தளவாய் சுவாமிக்கு சமைக்காத பச்சை பொருட்கள் நிவேதனமாக படைக்கப்படுகின்றன.

நித்தியபடி நடக்கும் அபிஷேகம் ஆராதனைகளை பக்தர்கள் பார்வையிட அனுமதி இல்லை. வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பங்குனி பெருந்திருவிழாவில் 6ம் திருநாள் மட்டும் கற்பூற ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இக்கோயிலுக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூர் சென்று அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரப்பாடி வழியாக 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்றால் நம்பியாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. ரயில்களில் செல்பவர்கள் வள்ளியூரில் இருந்து செல்லமுடியும். வள்ளியூரில் பக்தர்களுக்கு தங்குவதற்கு தனியார் விடுதி வசதிகள் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment