எல்லா நன்மைகளும் உங்களை நாடி வர ஒரே ஒரு குளியல் போதும்.!
குளிக்கும் நேரம்,குளிக்கும் நிலை, குளிக்கும் திசை மூன்றும் மிக முக்கியம்.!
குளிப்பதற்குக் கூட திசையா?… இதெல்லாம் ஏமாற்று வேலை, மூடப்பழக்கம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் எதையுமே காரணம் இல்லாமல் சொல்லவில்லை.
அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களுக்குப் பின்னும் பல ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.!
அந்த வகையில், குளிப்பதையும் எப்போது குளிக்க வேண்டும்.
எந்த திசையில் நின்று குளிக்க வேண்டும் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
குளிக்கும் முறைகளில் உள்ள அபூர்வ ரகசியங்கள்.
காலை ஆறுமணிக்குள்ளும் மாலை ஆறு மணிக்குள்ளும் என்று இருவேளை குளிர்ந்த நீரில் குளிப்பது உத்தமம்.!
ஒருவேளை மட்டுமே குளிப்பவர்கள் அதிகாலை 4.30 மணி முதல் காலை 8 மணிக்குள் குளித்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.!
குளிக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். இவை இரண்டும் குளிப்பதற்கான உத்தம திசைகளாகும்.
கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தாலும் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல்வலி வரும்.
குளியல் அறை எப்படி இருந்தாலும் குளிக்க நிற்கும் நிலையை கிழக்குப்பார்த்து அல்லது வடக்குப்பார்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.!
முழு உணவு சாப்பிட்டு 4 மணி நேரமும் சிற்றுண்டி என்றால் 2 மணி நேரமும் கழிந்த பின்தான் குளிக்க வேண்டும்.!
உடற்பயிற்சி,யோகாசனம் போன்றவை செய்தாலோ எண்ணெய் தேய்த்திருந்தாலோ குறைந்தது 15 நிமிடம் முதல் ஒருமணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும்.!
தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.
குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும்.
இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.!
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை. அல்லது மேலுள்ள அக்னி உடலின் ஆழத்திற்கு சென்று நோய்களை உருவாக்கும்.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிருஷ்டம்” என்பர்.
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
அதில் ஒரு நன்மையும் உண்டு ஆற்றில் குளிக்கும் போது முதுகில் எதாவது அட்டைபூச்சிகள் இருந்தால் கூட தெரியாது.முதுகை முதலில் துடைத்தால் அவை மேலே வராமல் தடுக்கப்படும்.!
துண்டை குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். ஆனால் நாம் அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிக்கிறோம். உலர்ந்த துணியானது உள்சூட்டை வேகமாக பரவச்செய்து பலவித உள் நோய்களை உருவாக்கும்.
குளிக்கும் போது குறைந்தப்பட்சம் ஏதேனும் ஒரு துண்டுத்துணியையாவது அணிந்தே குளிக்க வேண்டும். அல்லது நீரின் குளிர்ச்சி உடலில் தங்காது வேகமாக வெளியேறி தோசத்தை உண்டாக்கும்.!
பிறருடன் வாய்திறந்து பேசாமல் செய்கின்ற ஐந்து வேலைகளில் குளியலும் ஒன்று.
1.பிராத்தனை செய்தல்
2.யோகம் செய்தல்
3.படித்தல்
4.குளித்தல்
5.சாப்பிடுதல்
ஆற்றில் குளிப்பவர்கள் ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
குளியலை மிக மெதுவாக கடைப்பிடிக்க வேண்டும். வேகமாக குளித்தால் நரம்புத்தளர்ச்சி, இரத்தஅழுத்தம் ஏற்படும்.!
குளிக்கும் நீரில் வேண்டும் என்றே காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.!
நீரை விரயம் செய்ய செய்ய கடன் அதிகரிக்கும்.
கடல் நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களையும், சகல தோஷங்களையும் அறுக்கும்.!
வெள்ளியன்று கடல் நீரில் குளிப்பது நல்லது அல்ல.
ஆலயங்கள் இல்லாத ஊரிலும் ஆறுகள் இல்லாத ஊர்களிலும் குடி இருக்க வேண்டாம் என்பார்கள் பெரியோர்கள்.
ஏன் தெரியுமா? வெளியே சுத்த படுத்த ஆறுகள் , உள்ளே சுத்தம் படுத்த ஆலயங்கள். இதை சரியாக பயன் படுத்த கூடிய மாநிலத்திலே கேரளா தான் முதலிடம் ஆகையால் தான் கேரளாவில் இதனை அதிகமாக கடை பிடித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கிறது.!
குளித்து முடித்த பின்பு உங்கள் மனம் கவர்ந்த இறைநாமத்தை மூன்று முறை கூறுங்கள்.
குளித்தபின்பு 20 நிமிடம் கழித்து உணவு உண்ணுங்கள்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment