வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில திசைகளில் சில பொருட்களை வைக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதனடிப்படையில் சில குறிப்பிட்ட திசைகளில், எதிர்மறையான பொருட்களை வைப்பதன் மூலம் அதன் தாக்கம் நமக்கு அதிகமாகவே ஏற்படும். வடகிழக்கு மூலையான குபேர மூலையிலும், தென்கிழக்கு மூலையான அக்னி மூலையிலும் இருக்க கூடாத வண்ணம், அதாவது நிறம் என்ன? இருக்கக் கூடாத பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றியும், இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக குபேர மூலை என்று சொல்லப்படும் வடக்கு மூலையை ஆட்சி செய்பவர் புதன் பகவான். இந்த மூலையை நீர் சம்பந்தப்பட்ட மூலை என்றும் சொல்லுவார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வடக்கு பார்த்த சுவற்றில், கட்டாயமாக அடர் சிவப்பு நிறமும், அடர் மஞ்சள் நிறமும் உள்ள வர்ணத்தை பூசக்கூடாது. அதாவது dark red, dark yellow paint வடக்கு சுவற்றில் இருக்கவே கூடாது.
நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் வடக்கு பார்த்து இருக்கும் சுவற்றிலோ, வடக்கு மூலையிலோ வைக்கக் கூடாது. அதாவது சூரியன் உதிக்கின்றது போன்ற வரைபடம், சூரிய பகவானின் படம், இப்படியாக தெரியாமல் மாட்டி வைத்திருந்தாலும் கூட அதை அங்கிருந்து எடுத்துவிட்டு, நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை அந்த இடத்தில் வைக்கலாம். இதற்கு பதிலாக வடக்கு திசையில் மீன் தொட்டி வைக்கலாம். நீர் சம்பந்தப்பட்ட சீனரீஸ் ஏதாவது வாங்கி வைக்கலாம். அருவி சம்பந்தப்பட்ட படங்களை மாட்டலாம்.
அப்படி நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் வைக்கும் பட்சத்தில் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சிறிய Artificial fountain வடக்குப் பக்கத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வடக்குப் பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பதும் மிகவும் நல்லது.
கண்ணாடி மாட்ட வேண்டும் என்று சொன்னதும் அதை மாட்டும் முறையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே உங்கள் வீட்டில் கண்ணாடியை மாட்டுவதாக இருந்தாலும், சுவாமி படங்களை மாட்டுவதாக இருந்தாலும், இறந்தவர்களின் படங்களை மாற்றுவதாக இருந்தாலும் சுவற்றில் ஆணி அடித்து அப்படியே மாற்றி விடக்கூடாது.
அந்தக் காலங்களில் எல்லாம் சுவற்றில் ஆணி அடித்து கீழே ஒரு கட்டை துண்டை வைத்து, ஒரு கம்பியால் படங்களை கட்டி சுவற்றில் மீது படங்கள் ஓட்டி எடுக்காமல், பூமியை பார்த்தவாறு இருக்கும். அதாவது அந்த படத்தின் கீழ்ப்பகுதி மட்டும்தான் சுவற்றை தழுவி இருக்கும். அந்த காலத்தில் இறந்தவர்களின் படத்தை எல்லாம் சுவற்றின் அப்படித்தான் மாட்டி வைத்திருப்பார்கள். அப்படி வைத்தால் தான் எந்த ஒரு கெட்ட ஆற்றலும் அந்த படத்தை தாக்குக்கும் போது, அந்த அதிர்வலைகள் பூமியை நோக்கி சென்றுவிடும். வீட்டில் இருப்பவர்களை தாக்காது என்பதற்காகத்தான் படங்களை தாழ்வாக மாட்ட வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
அடுத்ததாக தென்கிழக்கு மூலை. அக்னி மூலை என்று சொல்வார்கள். இந்த இடத்தில் நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வைக்க வேண்டாம். நீல நிறத்தில் வர்ணம் பூச வேண்டாம். இங்கு சூரியனின் படம் வைத்துக்கொள்ளலாம். இந்த திசையில் இரண்டு சிவப்பு குதிரைகள் ஓடுகின்ற மாதிரி வைத்தால் மிகவும் நல்லது. அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூட சொல்லலாம். ஆனால் அந்தக் குதிரையானது வீட்டிற்குள் ஓடி வரும் மாதிரி இருக்க வேண்டுமே தவிர, வெளியே ஓடுவதுபோல ஒட்டக்கூடாது...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment