Monday, 9 September 2019

விபூதியின் வகைகளும், தயாரிக்கும் முறையும்.!!

கல்பம் என்பது, கன்றுடன் கூடிய  பசுவின் சாணத்தை, பூமியின் விழும் முன்பாகல தாமரை இலையில் பிடித்து, உருண்டையாக்கி, பஞ்ச பிரம்ம மந்திரங்களால், சிவாக்கினியில் எரித்து எடுப்பது. இதனை ‘கல்பத் திருநீறு’ என்பார்கள்.

காடுகளில் கிடைக்கும் பசுஞ் சாணங்களைக் கொண்டு, முறைப்படி தயாரிக்கப்படுவது ‘அணுகல்பத் திருநீறு’ எனப்படும்.

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக், காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது ‘உபகல்பத் திருநீறு’ ஆகும்.
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தை, சுள்ளிகளால் எரித்து எடுப்பதற்கு ‘அகல்பத் திருநீறு’ என்று பெயர். 

இந்த நான்கு வகை விபூதிகளில் கல்பம் என்று சொல்லப்படும் விபூதி மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது.
சாதாரணமான விபூதியை விட, முறைப்படி தயார் செய்த விபூதிக்கு ,உடனடி பலன் கிடைக்கும்.
 
விபூதி  தயாரிக்கும் முறை 
திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக்ஷ, அதனை பசுஞ்சாணத்துடன்  கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும், அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து, நெல் உமியால் மூடி, நெருப்பில் புடம் போடவேண்டும். தீ தணிந்த பிறகு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிகவும் மென்மையான திருநீறு கிடைத்துவிடும். இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.

இதனால், எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்தினால் அந்த நோய்கள் வராமல் தடுக்கப்பட்டுவிடும். 
வில்வம், மகாலட்சுமி வசிக்கும் இடங்களில் ஒன்று.  பசுவும், லட்சுமியின் இருப்பிடங்களில் ஒன்று.   விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும், அதிகத் துற்நாற்றம் உள்ள   பொருள்இல்லை.
 அந்த துர்நாற்றத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு.
மஹா பஸ்மமான பரமாத்மாவும், விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment