1. அல்லல்போம் விநாயகர்
கிரிவலத்துக்கு புகழ் பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் உள்ள ‘அல்லல்போம் விநாயகர்’ சன்னதியே விநாயகரின் முதல் படை வீடு என்கின்றனர். ‘அல்லல்’ - துன்பம், ‘போம்’ - நீக்குதல். அதாவது, தீராத துன்பத்தில் தவிப்பர்கள் இந்த அல்லல்போம் விநாயகரை தரிசித்தால் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்.
2. ஆழத்து பிள்ளையார்
தமிழகத்தில் சிவன் சுயம்புவாய் வீற்றிருக்கும் பிரபல தலங்களுள் ஒன்றான, விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோயிலின், முதல் பிரகாரத்தில் இந்த ‘ஆழத்து பிள்ளையாரும்’ அமர்ந்திருக்கிறார். இதுதான் 2ம்படை வீடு. பெயருக்கேற்ற மாதிரியே 18 அடி பள்ளத்தில் வீற்றிருக்கும் இவரை வணங்கினால் வளமான கல்வி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
3. கள்ள வாரணப்பிள்ளையார்
நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், கள்ளவாரணப்பிள்ளையார் வீற்றிருக்கிறார். எதுக்கு இந்த பெயராம்? அதாவது, பாற்கடலை கடைந்து எடுத்த அமிர்தத்தை, மகாவிஷ்ணு அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். தனக்கு முதலில் படைக்காமல் மற்றவர்களுக்கு விநியோகிப்பதா என்ற செல்லமான கோபத்தில் அமிர்த குடத்தை ஒளித்து வைத்தாராம். அதனால்தான் அந்த பெயராம் (என்னா ஒரு கள்ளத்தனம்). ஆயுள் வேண்டி இந்த 3ம் படை விநாயகரை பக்தர்கள் வணங்குகின்றனர்.
4. சித்தி விநாயகர்
மதுரை மீனாட்சியம்மன் கோயில், அம்மன் சன்னதியில் சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார். ‘நரியை பரியாக்கிய லீலை’ கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த லீலை நடப்பதற்கு முன்பு மாணிக்கவாசகர், இந்த சித்தி விநாயகரைத்தான் வணங்கி சென்றாராம். எண்ணிய சிந்தனைகள் வெற்றியை தருவதே இந்த நான்காம் படை நாயகரின் சித்தம் என்கின்றனர் ஆன்மிகவாதிகள்.
5. கற்பக விநாயகர் கோயில்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் 5ம் படை வீடாக கருதப்படுகிறது. சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன், குடவரை கோயிலாக கட்டப்பட்ட முதல் பிள்ளையார் தலமென போற்றப்படுகிறது. இங்கு 6 அடியில் பிரமாண்ட வலம் சுழி விநாயகர் வீற்றிருக்கிறார். வலது கையில் சிவலிங்கம் வீற்றிருப்பது விசேஷம். இங்கு சதுர்த்தி விழாவில் நடக்கும் சந்தனக்காப்பு மிகவும் பிரபலமானது. கஜமுகாசுரனை கொன்ற பாவம் தீர விநாயகர், தந்தை ஈசனுக்கு பூஜை செய்த தலமிது என்றும் கூறப்படுகிறது. கல்வி, செல்வம், குழந்தைப்பேறு வேண்டி இத்தலங்களுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
6. பொள்ளாப்பிள்ளையார்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரில் பொள்ளாப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இங்கும் மூலவர் சிவனாக இருந்தாலும், விநாயகரே முக்கியத்தவம் பெறுகிறார். ‘பொள்ளா’ என்றால் ‘உளியால் செதுக்காத’ என்று அர்த்தமாம். அதாவது, உளியால் செதுக்காமல் சுயம்புவாக உருவாகியவர் இந்த பொள்ளாப்பிள்ளையார் என்கின்றனர். வியாபாரத்தில் வெற்றி வேண்டுமா? இந்த ஆறாம் படை கணபதியை தரித்து விட்டு வாருங்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment