பொம்மைகள் மற்றும் சிலைகளை ஒரு நியதியுடன் வீடுகள் மற்றும் கோவில்களில் கண்காட்சி போல நவராத்திரி திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் இந்து மதத்தின் சம்பிரதாய விழா என்றும் சொல்லலாம்.
‘கொலு’ என்ற சொல்லைக் கேட்கும் பொழுதே சிறியவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதீதமாக இருக்கத்தான் செய்கின்றது.
பொம்மைகள் மற்றும் சிலைகளை ஒரு நியதியுடன் வீடுகள் மற்றும் கோவில்களில் கண்காட்சி போல நவராத்திரி திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் இந்து மதத்தின் சம்பிரதாய விழா என்றும் சொல்லலாம்.
கொலு வைக்கும்பொழுது எல்லா வீடுகளிலும் ஒரே சம்பிரதாயத்தைத்தான் கடைபிடிக்கிறார்கள்.
கொலு வைப்பதற்கான படிக்கட்டுகளை அமைக்கும் பொழுது அவை மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது என்று ஒற்றைப்படை வரிசையில் 9 படிகளுக்கு மிகாமல் அமைக்கிறார்கள். சிலர் 9 படிகளுக்கு மேலும் ஒற்றைப்படை வரிசையில் அமைக்கிறார்கள்.
மேலிருந்து முதல் மூன்று வரிசைப் படிகளானது கடவுள் பொம்மைகளை வைப்பதற்காக ஒதுக்கப் படுகின்றது. இதுபோன்ற பொம்மைக் கொலுக்களில் அஷ்ட லஷ்மிகள் மற்றும் தசாவதார பொம்மைகள் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும்.
இதன் பிறகு சித்தர்கள், துறவிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தத்துவஞானிகள், கொடையாளிகள் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான வீடுகளில் ஏதாவது ஒரு கருப்பொருளைக் கொண்டு மொத்த கொலுவையும் வடிவமைக்கிறார்கள்.
கொலுவில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்று கலசமாகும்.
விவசாயத்தை மேம்படுத்தும், வளர்க்கும் விதமாக பல்வேறு யோசனைகளுடன் கொலுக்களை அமைக்கிறார்கள். அழகான வயல்வெளி, கிணறு, வாய்க்கால், அறுவடை, ஏர் ஓட்டுதல் என்று முடிந்தவரை விவசாயக் காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்து இளைய சமுதாயத்தினருக்கும், குழந்தைகளுக்கும் விவசாயத்தைக் கண் முன் கொண்டு வரும் விதமாக காட்சிகளை அமைக்கிறார்கள்.
கொலு அமைப்பது என்பது மற்ற விழாக்களில் இருந்து வேறுபட்ட, சுவாரஸ்யமான விழாவின் பகுதியாக உள்ளது.
மரப்பாச்சி பொம்மைகள், மண் பொம்மைகள், பீங்கான் பொம்மைகள், பேப்பர் மேஃச், துணி பொம்மைகள், ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் போன்றவற்றால் செய்யப்படும் பொம்மைகள் கொலுவை அலங்கரிக்கின்றன.
படிக்கட்டுகளை நேராகவும், அரைவட்ட வடிவிலும், பிரமிட் போன்ற வடிவிலும் அவரவர் ரசனைக்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள். முதலில் மரப்படிக்கட்டுகளை வைத்து அமைக்கப்பட்ட கொலுக்கள் கால மாற்றத்தில் இப்பொழுது ஸ்டீல் படிக்கட்டுகளாக மாற்றம் பெற்று விட்டன. படிக்கட்டுகளின் மீது துணிகளை விரித்து அதன் மீதே பொம்மைகளானது அடுக்கப்படு கின்றது.
கொலு படிக்கட்டானது கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருப்பது போல் அமைக்கப்பட வேண்டும் என்பது நியதியாகும்.
நல்ல நேரத்திலேயே கொலுவானது அமைக்கப்பட வேண்டும் என்ற சம்பிரதாயத்தையும் கொலு வைப்பவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
அதே போல் கொலு வைக்கத் துவங்கும்பொழுது முதன் முதலில் விநாயகர் பொம்மை அல்லது மஞ்சள் விநாயகரைப் பிடித்து வைத்த பிறகே மற்ற பொம்மைகளை அடுக்க வேண்டும் என்பதும் நியதியாகக் கூறப்படு கின்றது.
கீழ் படிக்கட்டிலிருந்து துவங்கி மேல் படிக்கட்டு வரை பொம்மைகளை அடுக்க வேண்டும் என்பதும் கொலுக்களில் கடைபிடிக்கப் படுகின்றது.
காலை, மாலை இரு வேளையும் நைவேத்தியத்துடன் கொலுவிற்குப் பூஜை செய்ய வேண்டும்.
இப்பொழுது விதவிதமான பொம்மைகளைக் கொலுவில் வைப்பதை பொழுது போக்காகச் செய்தாலும், முதல் படிக்கட்டில் ஓரறிவுள்ள செடி கொடிகள், இரண்டாம் படிக்கட்டில் ஈரறிவு உயிரினங்கள் அல்லது மூன்று படிக்கட்டுகளிலும் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றை வரிசைப்படுத்தி வைப்பதும், செட்டியார் பொம்மைகள் வைக்கப்படுவதும் கட்டாயம் கொலுவில் இடம் பெற வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இந்த வருடப் புது வரவு பொம்மை என்றால் அது ‘அத்தி வரதர்’ பொம்மையாகத்தான் இருக்கும்.
மெட்டல் ஆன்டிக் ஃபேன், பித்தளை கைஅடி பம்ப்பு, தியானத்தில் இருக்கும் திபெத்தியத் துறவிகள், மினியேச்சர் டைனிங் டேபிள் செட், மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் பஞ்சபாண்டவர் பொம்மைகள், மண் குடத்தில் காகம் வாயில் கல்லுடன் அமர்ந்திருக்கும் பொம்மை, சோட்டாபீம், டோரேமான், மோட்டு பப்லு போன்ற கார்ட்டூன் பாத்திரப் பொம்மைகள், கிருஷ்ணரும், ருக்மணியும் இணைந்த சம்மோஹன கிருஷ்ணர் பொம்மை என பல வித்தியாசமான பொம்மைகள் ஒவ்வொரு கொலுவிலும் பல வீடுகளில் இடம் பெறுகின்றன.
இவை மட்டுமல்லாமல் கொலு வைப்பவர்கள் மிகவும் வித்தியாசமாக தங்களது கற்பனையைக் கலந்து மிகவும் அழகான பொம்மைகளை உருவாக்கி கொலுவை அலங்கரிக்கிறார்கள்.
கொலுவைப் பார்ப்பதற்கு உறவினர்கள், தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் வந்து கடவுள் பாடல்களைப் பாடி மிகவும் சந்தோஷமாக தாம்பூலத்தைப் பெற்றுச் செல்வதும் வீட்டிற்கு நன்மை அளிக்கும் நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
கொலு வைக்கும் முறை
கொலுவின் முதல்படியில், ஓருயிர்ப் பொருள்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளும், 2-ம் படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்றவைகளும், 3-ம் படியில் மூவறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவையும், 4-ம் படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்றவையும், 5-ம் படியில் ஐந்தறிவு ஜீவன்களான விலங்குகள், பறவைகளும், 6-ம் படியில் வாழ்வில் உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளும், 7-ம் படியில் மனிதர்களில் இருந்து தெய்வத்தை கண்ட மகான்கள் மற்றும் மகரிஷிகளும், 8-ம் படியில் தெய்வங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள், அஷ்டதிக்கு பாலகர்களும், 9-ம் படியில் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் தத்தம் மனைவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க, நடுநாயகமாக ஆதிபராசக்தி உருவ பொம்மைகள் வைத்து வழிபடுவதே பொம்மைகள் வைக்கும் முறையாகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment