Sunday, 8 September 2019

திருநீற்றின் மக்துவமும், மருத்துவ குணமும்.!!

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு, மகிமை என்றும் பொருள். 

விபூதி, திருநீறு என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும். நமக்கு  விபூதி உணர்த்துகிறது. 

விபூதி அணியும் முறை
விபூதியை அணிவதற்கும் சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன. விபூதியை தரித்துக்கொள்ளும்போது, கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோதான் அணிந்துகொள்ளவேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும். விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும். 
காலையிலும் மாலையிலும், கோவிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.
அணியக்கூடிய இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, உச்சந்தலை; நெற்றி; மார்புப் பகுதி; தொப்புளுக்கு சற்று மேல்; இடது தோள்பட்டையில்; வலது தோள்பட்டையில்; இடது கை மற்றும் வலது கையின் நடுவில்; இடது மற்றும் வலது மணிக்கட்டில்; இடது மற்றும் வலது இடுப்புப் பகுதியில்; இடது மற்றும் வலது கால் நடுவில்; முதுகுக்குக் கீழ் பகுதி; கழுத்து முழுவதும்; இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழியில்.

மருத்துவ குணங்கள் 
விஷ பூச்சிகளின் கடிக்கு அருமருந்து விபூதி தான். அதனால், பூச்சி கடிக்கு, விபூதி மந்திரித்து தருவது வழக்கம்.
முறைப்படி தயாரான திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. குறிப்பாக, தலைக்குக் குளித்ததும், நெற்றி நிறையத் திருநீறு பூசுவார்கள். இதனால் சளி பிடிக்காது. நெற்றிப் பகுதியில் உள்ள நீரை, வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை திருநீறுக்கு உண்டு. இதனால் சளி மட்டுமல்லாமல் தலைவலியும் ஏற்படாது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment